மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணம் இது தான்!
பொதுவாக முதிர் வயதை அடைந்தவர்கள் தான் மூட்டு வலி என்று சொல்லுவதுண்டு. ஆனால், இன்று மிக இளம் வயதினர் கூட, மூட்டு வலி என்று கூறுவதுண்டு. இதற்க்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான் முக்கிய காரணமாகிறது.
தற்போது இந்த பதிவில், முட்டு வலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது பற்றி பார்ப்போம்.
உணவு பழக்கவழக்கங்கள்
அன்று நம்முடைய முன்னோர்கள் சத்தான உணவுகளை சாப்பிட்டதால் தான், அன்று பல்லாண்டு காலம் சுகத்துடன் வாழ்ந்தனர். ஆனால், இன்று இன்றையல் தலைமுறையினரை மேலை நாட்டு உணவு முறைகள் தான் ஆக்கிரமித்துள்ளது. இந்த பழக்கவழக்கங்கள் தான், நமக்கு மூட்டு வலி ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
அதிக உடல் எடை
நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகரிப்பதால், நமக்கு உடல் எடை அதிகரிக்கிறது. இதனால், இந்த உடலை சுமக்க முடியாமல் கூட மூட்டுகளில் வலி ஏற்படுகிறது.
எண்ணெய் உணவுகள்
நம்மில் அதிகமானோர் எண்ணெயில் சமைத்த உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. இதனால், நமது உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவதும், ஒருவகையில் மூட்டு வலி ஏற்பட காரணமாக அமைகிறது.