அடடே..! இவ்வளவு நாளும் இத சாதாரணமா நெனச்சீட்டோமே…!! உடலுக்கு ஆரோக்கியம் தரும் பருப்பு வகைகள்….!!

Published by
லீனா

இன்றைய நாகரிகமான உலகில் நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பது மிக கடினமான சூழ்நிலையாக மாறி வருகிறது. உடலை பாதுகாப்பதற்கு இயற்கையான உணவு முறைகளை கையாள வேண்டும்.

நாம் என்றைக்கு மேலை நாட்டு உணவுகளை நாகரிகமாக நினைத்து சாப்பிட ஆரம்பித்தோமோ அன்றிலிருந்தே, நமது உடல் ஆரோக்கியம் கெட்டு போய்விட்டது என்று சொல்லலாம்.

பருப்பு வகைகள்

Related imageதற்போது இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பருப்பு வகைகளின் பயன்களை பற்றி பார்ப்போம்.

தட்டை பயறு

தட்டை பயறு அதிகமாக குழம்பு வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த பெயரில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய, பொட்டாசியம், நார்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த பருப்பு வகையை நமது உணவில் அனுதினமும் சேர்த்துக்கொள்ளும் போது, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் தசை சுருக்கத்தை தடுத்து, இளமை தோற்றத்தை அளிக்கிறது.

கடலை பருப்பு 

கடலை பருப்பு நாம் அடிக்கடி பயன்படுத்தும் பருப்பு வகைகளில் ஒன்று . இந்த பருப்பில், ஃபோலிக் அமிலம், மாங்கனீசு, இரும்புச்சத்து, தாமிர சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது.

இதில் உள்ள சத்துக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. மேலும் இது இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் இது உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

சுண்டல்

நாம் பயணம் செல்லும் போது அதிகமாக சுண்டலை தான் வாங்கி சாப்பிடுவது உண்டு. இந்த சுண்டலில், புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.

இதனை நாம் சாப்பிடுவதனால், கருப்பை குழாயில் உள்ள பிரச்சனைகளை நீக்குகிறது. மேலும் ரத்த சோகை போன்ற இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்காலில் இருந்து விடுதலை கொடுக்கிறது.

பச்சை பயறு

பச்சை பயறு நமது உணவுகளில் அடிக்கடி சேர்க்கப்படக்கூடிய உணவு வகைகளில் ஒன்று . இந்த பயரில், புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம். பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

இதனை நமது உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் போது, உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை கரைத்து, உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

துவரம் பருப்பு

துவரம் பருப்பு நமது சமையலில் அதிகமாக பயன்படுத்த கூடிய பருப்பு வகைகளில் ஒன்று. இந்த பருப்பில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பலவகையான சத்துக்கள் உள்ளது. புரத சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த பருப்பினை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நமது உடலின் முக்கியமான பாகமான குடலின் இயக்கம் சீராக இருக்க உதவுகிறது. மேலும் இது மலசிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.

Published by
லீனா

Recent Posts

கடைசி டெஸ்ட் முடிந்த பிறகு ஓய்வா? மனம் திறந்த ரோஹித் சர்மா!

சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…

12 minutes ago

தமிழ்நாட்டில் போராட்டங்கள் மறுக்கப்படுகிறதா? கே.பாலகிருஷ்ணின் விமர்சனமும்.. சேகர்பாபுவின் விளக்கமும்…

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார்…

25 minutes ago

விருதுநகர் : பட்டாசு ஆலை வெடி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

1 hour ago

“சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது” மத கஜ ராஜா குறித்து விஷால்!

சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…

2 hours ago

அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…

2 hours ago

Live : 2025-ன் முதல் ஜல்லிக்கட்டு முதல்… பல்வேறு அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…

3 hours ago