இறைவன் கொடுத்த வரமான இயற்கையை நாம் நமது அன்றாட வாழ்வில் பல நோய்களை குணப்படுத்துவதற்காக பயன்படுத்துகிறோம். இந்த வகையில் நெருஞ்சில் இறைவன் நமக்கு கொடுத்த மிக அற்புதமான மூலிகை என்றே கூறலாம். மறுத்து மூலிகையான இதில், சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில், பெரு நெருஞ்சில் என பல வகைகள் உண்டு.
இந்த மூலிகை செடியான நெருஞ்சில் செடியில் பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த மூலிகை செடியில், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்த நெரிஞ்சிலின் இலை, பூ, காய், வேர் அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
சிறு நெருஞ்சில் :
சிறு நெருஞ்சில் மஞ்சள் நிற மலர்களுடையது. இதன் பூக்கள், சூரியன் திசைநோக்கித் திரும்பும் தன்மையுடையவை. காய் முற்றும்போது முள்ளுடன் இருக்கும். சிறு நெருஞ்சில் ஏராளமான நோய்களை குணப்படுத்தக்கூடியது.
பெண்களுக்கான பிரச்சனைகள் :
இதன் வேறை எலுமிச்சை பழத்தின் சாறு விட்டு அரைத்து குடித்து வந்தால் உரிய வயதில் பூப்பெய்தாத பெண்களுக்கு தீர்வு கிடைக்கும்.
நெருஞ்சில் இலைகளை 50 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் விட்டு பாதியாகும் அளவு காய்ச்சி தினமும் காலையில் அருந்தி வந்தால் பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குவதுடன் குழந்தை பேறு உண்டாகும்.
வெட்டை நோய் :
நெருஞ்சில் செடியை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து இரண்டு கிராம் அளவு, பாலுடன் கலந்து காலை மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் வெட்டை நோய் குணமாகும்.
சிறுநீரக பிரச்சனை :
நெருஞ்சில் முல்லை தண்ணீர் விட்டு கஷாயமாக்கி குடித்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குணமாகும். குறிப்பாக, சிறுநீரகக் கல்லை கரைத்து சிறுநீர் தடையின்றி போகச் செய்யும். கர்ப்பிணிகளுக்கு வெறும் சிறுநீர்பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து.
செப்பு நெருஞ்சில் :
புல் தரையில் தரையோடு தரையாக படர்ந்து வளரும் கோடி வகை இது. இதன் பூக்கள் ரோஜாப்பூவின் நிறத்தில் இருக்கும். இதன் இலைகளை கஷாயமாக்கி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.
வேர் புழுக்கொல்லியாக செயல்படும். முழுகி செடியையும் கொதிக்க வைத்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள் வெளியே தள்ளும் தன்மை கொண்டது.
பெரு நெருஞ்சில் :
இந்த நெருஞ்சிலை யானை நெருஞ்சில் அல்லது யானை வணங்கி என்று சொல்வார்கள். மற்ற நெருஞ்சிலைவிட இதன் இலைகள் அகலமாகவும் பெரிதாகவும் காணப்படும்.
இதன் இலைகளை தண்ணீரில் போட்டால் சிறிது நேரத்தில் தண்ணீர் கொழகொழப்பாக எண்ணெய் போல ஆகிவிடும் . இது உடல் சூட்டை தணிக்கும் மருந்தாக பயன்படுகிறது.
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…