நெஞ்சக் கரிப்பு, எதுக்களிப்பு குணமாக இந்த மூன்று பொருள் போதும்..!
நம் வீட்டில் குறிப்பாக வயதில் பெரியவர்களாக இருந்தால் நெஞ்சக் கரிப்பு, எதுக்களிப்பு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதை வீட்டிலேயே எளிமையான முறையில் சரி செய்வது எப்படி என்று பதிவில் பார்ப்போம்.
பலரது வீடுகளிலும் அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கு முன்பே ஆங்கில மருந்துகளையும் சிரப்களையும் வாங்கி வைத்துக்கொண்டு அதை பயன்படுத்துவோம், அதனால் பல பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
கசாயம் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்
- ஓமம் =1 ஸ்பூன்
- சீரகம் =1ஸ்பூன்
- இஞ்சி =சிறிதளவு
ஓமம் ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன் எடுத்து பொன்னிறமாக வறுத்து அதில் 100 எம் எல் தண்ணீர் சேர்த்து இஞ்சியும் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து சாப்பிடுவதற்கு முன்பு அல்லது பின்பு எப்போது வேண்டுமானாலும் 50 எம் எல் அளவு எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு தற்காலிகமான முறைதான். இதனால் இந்த பக்க விளைவும் ஏற்படாது.
ஓமம்:
ஓமம் இல்லாத வீடுகளே இல்லை எனலாம், எண்ணெய் பொருள்களை பொரித்து எடுக்கக்கூடிய உணவுகளில் முக்கிய பங்காக உள்ளது, ஏனென்றால் எண்ணெயால் உண்டான ஜீரண மந்தத்தை நீக்கும் .ஆனால் இந்த காலகட்டத்தில் இவை சமையலறையில் காணாமல் போய்விட்டது. மாடர்ன் கிச்சனில் மாடர்ன் மருந்துகளும் விதவிதமான நோய்களும்தான் பெருகிவிட்டது.
சீரகம்:
சீரகம் நம் உடலில் அமிலம் அதிகமாக சுரந்தால் அதை உடனடியாக சீராக்கும் தன்மையை கொண்டது.
இஞ்சி:
இஞ்சி வயிற்றுப் பொருமல், வயிறுகட்டுதல் போன்றவற்றை உடனடியாக தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் இஞ்சியை தவிர்ப்பது நல்லது.
ஆகவே இந்த சின்ன சின்ன வீட்டு குறிப்புகளை நாம் அவ்வப்போது பயன்படுத்தி, அனைத்திற்கும் ஆங்கில மருந்துகளை நாடாமல் இயற்கையான முறைகளை பயன்படுத்தி பயனடைவோம்.