அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா…? கவலைய விடுங்க…!!! இதை செய்து பாருங்க…!!!
உஷ்ணமான காலங்களில் சிலருக்கு அம்மை நோய் போடுவதுண்டு. சிலருக்கு இதன் மூலம் சிறு சிறு பருக்கள் போன்று வரும், சிலருக்கும் பெரிய கொப்பளங்களாக வரும். இது வந்த பின் அந்த கொப்பளங்கள் மறைந்த பிறகும் அதனால் உண்டான தழும்புகள் மறையாமல் இருக்கும்.
இந்த தழும்புகள் முகத்தின் அழகை கெடுக்கிறது. இந்த தழும்புகளை போக்க இயற்கையான முறையில் சில வழிமுறைகள் உள்ளது. அவற்றை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கசகசா – சிறிதளவு
சிறிய மஞ்சள் துண்டு – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
பயித்த பயிறு மாவு – சிறிதளவு
செய்முறை :
சிறிதளவு கசகசா, மஞ்சள் துண்டு மற்றும் கறிவேப்பிலை இவை மூன்றையும் ஒன்றாக கலந்து நன்றாக மாய் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை முகத்தில் எங்கு அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாக தடவ வேண்டும்.
15-20 நிமிடங்கள் உலர விட வேண்டும். பின்னர் பயித்த மாவினால் முகத்தை கழுவி விட வேண்டும். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினுமினுப்பாக இருக்கும்.