நமது வீடுகளில் எந்த மரம் இருக்குதோ, இல்லையோ முருங்கைமரம் மட்டும் அனைத்து வீடுகளிலும் இருக்கும். இந்த மரம் பல மருத்துவ குணங்களை தனக்குள்ளே கொண்டுள்ளது. இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் உணவாக பயன்படுகிறது. இந்த மரம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட.
பல்வேறு நன்மைகளை கொண்டது முருங்கை கீரை. இது, உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. வலி நிவாரணியாக விளங்குவதுடன் வீக்கத்தை கரைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. முருகங்கை கீரையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு சத்தூட்டம் தரும் பானம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
காம்பு நீக்கிய துளிர் முருங்கை கீரையை பசையாக்கி அதிலிருந்து சுமார் 30 மில்லி அளவுக்கு சாறு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதையடுத்து, காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை வடிகட்டி தினமும் ஒருவேளை கொடுத்துவர குழந்தைகளின் எலும்பு, நரம்பு பலமாகும். பற்களுக்கு பலம் கொடுக்கும். தோலுக்கு பயன்தருவதுடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
வலி நிவாரணி :
இதை இளம்தாய்மார்கள் எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் சுரப்பியாக விளங்குகிறது. பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, இரும்பு, கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டுள்ளது. அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை கீரையை மேல்பற்றாக போடும்போது வலி நிவாரணியாகிறது.
பாலோடு சேர்த்து கொடுக்கும்போது எலும்புகளுக்கு பலம் தருகிறது. உப்போடு சேர்த்து சாறாக கொடுக்கும்போது நெஞ்சக சளியை வெளியேற்றுகிறது. நாவில் உண்டாகும் புண்கள், வாய் துர்நாற்றத்தை போக்கும் தினமும் ஒருபிடியாவது சேர்த்துக்கொள்ள பல நோய்களை போக்கும் கீரை என்பதில் சந்தேகம் இல்லை.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…