வன்னி இலை நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு தெரிந்திருக்க கூடும். நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இலையில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது. இப்பொது இவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது வன்னி மரம். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கொழுப்பு சத்தை குறைக்கிறது. தலைசுற்றலை போக்குகிறது. வன்னி இலைகளை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விட வேண்டும். இதனுடன் வன்னி இலைகளை சேர்க்க வேண்டும். தனியா, சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த தேனீரை வடிகட்டி குடித்துவர நரம்புகள் பலப்படும். நரம்பு மண்டலத்துக்கு பலம் தரும் உள்மருந்தாகிறது.
பல நோய்களை தீர்ப்பதற்கு நாமே மருந்துகள் செய்து சாப்பிட்டு நலம் பெறலாம். காது, மூக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சியால் தலைசுற்றல் உண்டாகும். கழுத்து எலும்புகளில் அழுத்தம், இறுக்கத்தால் மயக்கம் ஏற்படுகிறது.
இந்த தேனீர் மயக்கத்தை போக்குகிறது. வன்னியின் இலைகள் தொட்டாசிணுங்கி போன்று சிறிய உருவத்தை கொண்டது. இதன் காய்கள் தட்டையாக காணப்படும். இது அற்புத மருந்தாகிறது. வன்னிமர பட்டையை கொண்டு மூட்டு வலி, வீக்கத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் சிறிது நீர்விட வேண்டும். நசுக்கி வைத்திருக்கும் வன்னி மரப்பட்டை, சுக்குப்பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.
இந்த மருந்தை தொடர்ந்து அருந்தி வந்தால், முடக்கு வாதம், மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ளவர்கள் இந்த தேனீரை குடித்துவர பிரச்னைகள் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…