வன்னி இலையின் வல்லமை மிக்க குணங்கள்…!!!

vanni leaf

வன்னி இலை நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு தெரிந்திருக்க கூடும். நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இலையில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது. இப்பொது இவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

மருந்து-1:

அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது வன்னி மரம். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கொழுப்பு சத்தை குறைக்கிறது. தலைசுற்றலை போக்குகிறது. வன்னி இலைகளை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • வன்னி இலை
  • தனியா
  • சீரகம்
  • பனங்கற்கண்டு

செய்முறை:

பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விட வேண்டும். இதனுடன் வன்னி இலைகளை சேர்க்க வேண்டும். தனியா, சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த தேனீரை வடிகட்டி குடித்துவர நரம்புகள் பலப்படும். நரம்பு மண்டலத்துக்கு பலம் தரும் உள்மருந்தாகிறது.

பல நோய்களை தீர்ப்பதற்கு நாமே மருந்துகள் செய்து சாப்பிட்டு நலம் பெறலாம். காது, மூக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சியால் தலைசுற்றல் உண்டாகும். கழுத்து எலும்புகளில் அழுத்தம், இறுக்கத்தால் மயக்கம் ஏற்படுகிறது.

மருந்து-2:

இந்த தேனீர் மயக்கத்தை போக்குகிறது. வன்னியின் இலைகள் தொட்டாசிணுங்கி போன்று சிறிய உருவத்தை கொண்டது. இதன் காய்கள் தட்டையாக காணப்படும். இது அற்புத மருந்தாகிறது. வன்னிமர பட்டையை கொண்டு மூட்டு வலி, வீக்கத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • வன்னிமர பட்டை
  • சுக்கு
  • பனங்கற்கண்டு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது நீர்விட வேண்டும். நசுக்கி வைத்திருக்கும் வன்னி மரப்பட்டை, சுக்குப்பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.

இந்த மருந்தை தொடர்ந்து அருந்தி வந்தால், முடக்கு வாதம், மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ளவர்கள் இந்த தேனீரை குடித்துவர பிரச்னைகள் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்