நலம் தரும் நாவல் பழத்தின் திரளான நன்மைகள்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்..!
Jamun fruit – நாவல் பழத்தின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
மழைக்காலங்களில் குறிப்பாக ஜூன் மாதத்தில் இருந்து அதிகமாக கிடைக்கக்கூடிய பழம் தான் நாவல் பழம் .லேசான இனிப்பு புளிப்பு துவர்ப்பு என மூன்று சுவைகளையும் ஒன்றாக்கிய ஒரே பழம் நாவல் பழம். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பட்டை, இலை, விதை என அனைத்து பாகங்களுமே மருந்தாக பயன்படுகிறது.
நாவல் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் ;
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1, பி2,பி 3, பி 6,வைட்டமின் சத்துக்களும் ,பொட்டாசியம் ,மெக்னீசியம் ,பாஸ்பரஸ், அயன், போன்ற தாதுக்களையும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் பிளேவானாய்டுகளை கொண்டுள்ளது. மேலை நாடுகளில் கிடைக்க கூடிய ப்ளூபெர்ரி மற்றும் பிளாக்பெரி பழங்களின் சத்துக்கு இணையான சத்துக்களை நாவல் பழம் கொண்டுள்ளது. அதனால்தான் இதை இந்தியன் பிளாக்பெரி என்றும் அழைக்கின்றனர்.
ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது;
100 கிராம் பழத்தில் 1.62 மில்லி கிராம் இரும்புச்சத்தை கொண்டுள்ளது .மேலும் இரும்புச்சத்தை கிரகிக்க தேவையான விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளது. அதனால் இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் 100 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். இது புதிய சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தை சுத்தப்படுத்தவும் செய்கிறது.
சர்க்கரை நோய்;
நாவல் பழம் குறைந்த கிளைசிமி குறியீடு கொண்டுள்ளதால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதனால் சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் நாவல் பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பழத்தை விட இதன் விதையில் ஜம்போலின், ஜம்போ சைன் என்ற இரு வேதிப்பொருள்கள் உள்ளதால் நம் சாப்பிட்ட உணவு உடனடியாக மாவு சத்து ஆக மாறி ரத்தத்தில் கலக்கும் வேகத்தை குறைக்கிறது இதன் மூலம் சர்க்கரை கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
இதய ஆரோக்கியம்
ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் பிளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஊதா நிறத்திற்கு ஆன்தோசயனைன் தான் . காரணம் இது ரத்தக்குழாயில் கொழுப்புகள் படிவதை தடுக்கிறது. இதய தசைகள் சீராக இயங்க பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்தும் உதவி செய்கிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது.
பல் ஆரோக்கியம்;
பாலிபினால் ,ஆன்ட்டி ஆக்சிடென்ட், விட்டமின் சி போன்ற பற்களுக்கு தேவையான சத்துக்கள் உள்ளதால் பல்லில் ரத்த கசிவு ஏற்படாமல் பாதுகாத்து பற்களில் கிருமிகள் தங்காமல் பாதுகாத்துக் கொள்கிறது.
புற்றுநோயை வராமல் தடுக்கும்;
ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்டி கேன்சர் பிராப்பர்ட்டீஸ் பண்புகளை கொண்டு உள்ளதால் கேன்சர் செல்களை உருவாக்கும் நச்சுக்களை வெளியேற்றி கேன்சர் செல் வளர்வதை தடுக்கிறது. குறிப்பாக குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
பக்க விளைவுகள்;
நாவல் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள அமிலத்தன்மை பல் எனாமலை அரிக்கும் தன்மையை கொண்டுள்ளது. மேலும் ரத்த சக்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது என்பதால் ரத்த சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளவர்கள் மற்றும் ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் மிகக்குறைவான அளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ஹைபோகிளைசிமியா என்ற ஆபத்தான சூழலை ஏற்படுத்தும். மேலும் இதில் உள்ள அதிக அளவு ஆக்சிலேட் சிறுநீரக கற்களை உருவாக்கும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனில் ஒரு நாள் ஒன்றுக்கு 100 கிராம் அளவு எடுத்துக் கொள்வது போதுமானது. சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் 100 கிராமுக்கு மேல் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
ஆகவே இந்த சீசனில் கிடைக்கும் நாவல் பழத்தை தவறவிடாமல் வாங்கி ஒரு நாளுக்கு தேவையான பழங்களை மட்டும் சாப்பிட்டு அதன் ஆரோக்கியத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.