குதிகாலில் உள்ள கடினமான பகுதிகள் மிருதுவாக மாற இதை செய்து பாருங்க…!!!
இன்றைய காலகட்டத்தில் நவீன உலகமாய் மாறிக்கொண்டிருப்பதால், கடினமாக உழைப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பலரின் கடினமான உழைப்பு அவர்களின் உடல் உறுப்புகளின் பல பகுதிகளை பாதிக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் நம்மை பலவீனமாக்குகிறது.
கடினமாக உழைப்பவர்கள் கால்கள் மற்றும் கைகள் மிகவும் கடினமாக இருக்கும். இந்த வகையில் உடலில் அதிகமாக பாதிக்கப்படும் பகுதி குதிகால் தான். அதிலிருந்து விடுபட சில வழிகள்….
தேவையான பொருட்கள் :
- மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
செய்முறை :
ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளுடன், ஒன்றரை டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை, உங்கள் குதிகாலில் தூங்க செல்லும் முன் தேய்த்துக்கொள்ள வேண்டும்.
சாக்ஸ் அல்லது பிளாஸ்டிக் பேக்கை இருகால்களிலும் அணிந்துகொள்ள வேண்டும். இந்த முறை வெடிப்புள்ள குதிகாலை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவுவதோடு மென்மையாகவும் மாற்றுகிறது.