பிரண்டையின் பிரமாண்டமான மருத்துவ குணங்கள்….!!!
பிரண்டை செடியை நாம் அதிகமாக காட்டு பகுதிகளில் கூட பார்க்கலாம். இந்த கொடி நமது முன்னோர்களின் காலத்தில் மிக சிறந்த மருத்துவ பொருளாக பயன்பட்டுள்ளது. இந்த கொடியை வச்சிரவல்லி என்றும் அழைப்பார்கள். இந்த கொடியினமானது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வெப்பகாலங்களில் வளர கூடிய ஒரு கொடியினம்.
நம் முன்னோர்களை கூறியது போல, ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை நாம் சாதாரணமாக உண்ணும் துவையல், ஊறுகாய், அடை போன்றவற்றில் உபயோகிக்கப்படுகிறது. பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட்டைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை, முப்பிரண்டை என பல பிரிவுகள் உண்டு.
வயிற்று பிரச்சனைகள் :
பிரண்டை கொடி வயிற்று பிரச்சனைகளை தீர்க்க கூடிய ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பிரண்டையினால் வயிற்றுவலி, ஆசனவாய் எரிச்சல், ரத்தம் வரும் நோயான ரத்த மூலம், மூளை மூலம் மற்றும் கைகால் உளைச்சல் போன்ற நோய்களில் இருந்து விடுதலை அளிக்கிறது.இது அதிகமாக பசி உண்டாகும் தன்மை கொண்டது.
வலி, வீக்கம் :
பிரண்டையின் வேரை வெந்நீரில் குழைத்து, மேற்புறமாக பூசி வர வீக்கம் குறையும். பிரண்டையை பச்சையாக, நன்றாக அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, அடிபட்ட வீக்கத்தில் வைத்து கட்டினால் வீக்கம், ரத்தக்கட்டு குணமாகும்.
எலும்பு பிரச்சனை :
நமது உடல் பெலவீனத்தால் உடலில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை போக்க இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் எலும்பிற்கு பலம் அளிப்பதோடு, உடலை ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளவும் உதவுகிறது.