செவ்வாழையில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள்!

Default Image

செவ்வாழையின் மருத்துவ குணங்கள்.

வாழைப்பழம் நமக்கு எல்லா சீசன்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான பழம் ஆகும். இந்த பழத்தில் பல வகைகள் உள்ளன. அதாவது, நாட்டு வாழைப்பழம், செவ்வாழைப்பழம், கசலிப்பழம், கோலிக்குண்டு பழம், சோற்றுவாழைப்பழம் என பல வைகல் உள்ளன. அவற்றில் செவ்வாழையின் பலனையும், மருத்துவ குணங்களையும் இங்கு பாப்போம்.

இந்த செவ்வாழையில் பீட்டா கரோட்டின் உள்ளது எனவே இது கண் சம்மந்தப்பட்ட நோய்களை தடுக்கிறது. இதில், உயர்தர பொட்டாசியம் உள்ளதால், சிறுநீரக கற்களை தடுக்கிறது. வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் இதில் அதிகளவில் காணப்டுகிறது.

தொற்றுநோய்

தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.

கண் பார்வை

மாலை கண் நோயுள்ளவர்கள் இரவு  பிறகு 40 நாட்களுக்கு இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் சரியாகும். நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும். சொறி, சிரங்கு மற்றும் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு நல்ல நிவாரணியாக அமைகிறது. இரவு உணவுக்கு பிறகு சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். எந்த வயதினராக இருந்தாலும் அவர்களுக்குள்ள கண் பார்வை குறைபாடாய் சரி செய்யும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்