புகைபிடித்தலால் ஏற்படும் தீமைகள்!
இன்று புகை பிடித்தல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமைப்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனை இன்று படிக்கும் இளைஞர்கள் நாகரீகமாக என்கின்ற பெயரில், இதனை தங்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாக்கி கொள்கின்றனர்.
இந்த பழக்கம் நாளடைவில், மதுப்பழக்கம் போன்ற மோசமான பழக்கங்களுக்கு அடிமையாக்கி விடுகின்றது. இது அவர்களின் வாலிப வாழ்க்கையை பாழாக்குவதுடன், அவர்களது பெற்றோர்களையும் மன வேதனைக்கு ஆளாக்குகிறது. இதனால், அவர்களது குடும்பம் முழுவதுமே பாதிப்புக்குளாகிறது.
இப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ள இளைஞர்கள், அவர்களுக்கு திருமண வயது வரும் போது, ஒரு வாழ்க்கை துணையையும் தங்களுக்காக தேடிக் கொள்கின்றனர். இது நாளடைவில், அந்த பெண்ணையும், அந்த பெண்ணின் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கின்றது.
இவர்களது, வாழ்நாட்களும் மிகவும் குறைவாகி விடுகிறது. இதனால், அவர்கள் பெர்றேடுக்கும் குழந்தைகளுக்கு தந்தையின் ஆதரவு இல்லாமல், தவித்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.