கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்! எல்லாரும் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
Mango : மாம்பழம் அதிகமாக இந்த கோடைகாலத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே தர்பூசணி பழத்தை வாங்கி விரும்பி சாப்பிடுவது போல நம்மில் பலரும் மாம்பழத்தையும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஏனென்றால், கோடைகாலம் என்றாலே மாம்பழம் சீசன் தொடங்கிவிடும் எனவே எல்லாருடைய வீட்டிலும் மாம்பழம் இந்த கோடைகாலத்தில் இருக்கும்.
சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் கூட இதனை கோடை காலத்தில் அதிகமாக எடுத்துக்கொண்டால் நமது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மாம்பழம் கோடைகாலத்தில் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
தீமைகள்
- மாம்பழத்தில் அதிகமான இனிப்புசத்து இருப்பதால் எடை அதிகமாக இருப்பவர்கள் இந்த பழத்தை எடுத்தால் இன்னும் எடை அதிகமாகலாம்.
- இந்த பழத்தில் அதிகமான நார்சத்து ஏற்கனவே நிறைந்துள்ளது. எனவே அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் குடல் எரிச்சலை ஏற்படுத்தும்.
- அதைப்போலவே, அதிகமாக இந்த கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிட்டால் வயிற்றுபோக்கு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
- சாப்பிடுவதற்கு இனிப்பாக இருந்தாலும் மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் நமக்கு தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் உண்டாகலாம்.
- அதைப்போலவே, வாயில் உதடுகளில் புண்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
- கோடைகாலம் என்றாலே பலருக்கும் உடலில் சூடு பிடிக்கும் இந்த நேரத்தில் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் இன்னுமே உடல் சூடு அதிகமாகலாம்.
சாப்பிடவேண்டிய நேரம் மற்றும் அளவு
மாம்பழம் இரவு நேரங்களில் சாப்பிடுவதை முற்றிலும் தவரிக்கவேண்டும். இரவு நேரங்களில் சாப்பிட்டால் நமக்கு சூட்டை கிளப்பிவிடும். அதைப்போல ஒரு நாளுக்கு 2 மாம்பழங்கள் வரை நாம் சாப்பிட்டு கொள்ளலாம். அதற்கு மேல் சாப்பிடக்கூடாது.
தவிர்க்க வேண்டியவர்கள்
மாம்பழத்தை தவிர்க்கவேண்டியவர்கள் சர்க்கரை நோய் இருப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இனிப்பு சத்து மாம்பழத்தில் அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் சுவைக்காகவேண்டும் என்றால் ஒரு பீஸ் சாப்பிட்டு கொள்ளலாம். அதைப்போல உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்ப்பது நல்லது. அல்லது ஒரு அளவு எடுத்துக்கொள்ளலாம்.
நன்மைகள்
மாம்பழம் அளவோடு சாப்பிட்டால் பல நன்மைகள் கூட கிடைக்கிறது. அது என்னவென்றால், மாம்பழம் சாப்பிடுவதால் நமது சருமம் பளபளவென்று ஆகும். மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஆகியவை இருக்கிறது. இது நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதைப்போலவே, பொட்டாசியம், பீட்டா கரோட்டின்; ஃபோலேட் ஆகிய சத்துக்களும் இந்த மாம்பழத்தில் அதிகமாகவே இருக்கிறது. இது நம்மளுடைய செரிமானத்தை மேம்படுத்துகிறது.