நமது உடல் ஆரோக்கியத்தை சீராக்கும் சீரகத்தின் நன்மைகள்!

Default Image

பெரும்பாலும் நாம் நம்முடைய சமையல்களில் அனைத்து உணவுகளிலும், சீரகத்தை சேர்த்துக் கொள்வது வழக்கம். இந்த சீரகம் நமக்கு பார்ப்பதற்கு அழகாக தெரியவில்லை என்றாலும், மிக சிறியதாக இருந்தாலும், இதில் மருத்துவ குணங்கள் மிகவும் அதிகம் உள்ளது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், எந்த ஒரு நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்க கூடிய ஒன்றாகும்.

செரிமானம் 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாம் சாப்பிடும் உணவு செரிமானமாகாமல் காணப்படுவது வழக்கம். அந்த வகையில் உணவு செரிமானமாகாமல் இருப்பதை தவிர்க்க, சாதாரணத் தண்ணீருக்குப் பதிலாக உணவருந்தும் முன், இளஞ்சூடான தண்ணீர் அருந்துவதால் உணவு சீக்கிரம் செரிமானமாகும். 

வயிற்றுப்புண் 

நாம் நம் பள்ளிகளுக்கு, கல்லூரிக்கு, அலுவலகங்களுக்கு என்று காலையிலேயே நேரத்துக்கு எழுந்து, அவசர அவசரமாக காலை உணவை உண்ணாமல் செல்கிறோம், இதனால் நமக்கு வயிற்றில் வயிற்றுப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சீரகத்தை வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

தலைவலி 

இன்று பலரும் தலைவலியை பிரச்சினையினால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சினையில் இருந்து விடுபட நாம் பல மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். இதனால் நமக்கு பல பக்க விளைவுகளும் ஏற்படுகிறது.

ஆனால் நம் இயற்கையான முறையில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால், இந்த முறையை கைக் கொள்வது மிகச் சிறந்தது. இஞ்சியை தோல் சீவி, சில மணித்துளிகள் ஈரம் போகும் வரை உலர வைத்து, அதே அளவுக்கு சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் இரண்டின் கூட்டு அளவுக்கு சமமாக நாட்டுசர்க்கரை கலக்க வேண்டும். இந்த கலவையை அரை டீ ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால், தலைவலி படிப்படியாக குறைந்து முழுமையாக விடுதலை பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்