சிவக்கரந்தையின் அற்புதமான மருத்துவ குணங்கள்….!!!

Default Image

இறைவன் கொடுத்த வரம் இயற்கை. இந்த இயற்கை நமது உடலுக்கும், நமது வாழ்வாதாரத்திற்கும் மிக உதவியாக இருப்பதோடு, நமது உடலுக்கு தேவையான, ஆரோக்கியத்தையும், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. இந்த வகையில், சிவகரந்தை ஒரு சிறந்த மூலிகை செடியாக பயன்படுகிறது.

சிவக்கரந்தை மிகுந்த மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகைச்சடி. இது நல்ல வாசனையுடையது. இந்த மூலிகையை தினமும் பயன்படுத்தினால் நமது சரும அழகையும் மேம்படுத்த உதவுகிறது.

சிவக்கரந்தை பயன்படுத்தும் முறை :

இந்த மூலிகை செடியை பூக்கும் முன்பே கொண்டுவந்து மண்ணில்லாமல் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி வேரோடு எல்லா பாகங்களையும் இடித்து சூரணம் செய்து ஒரு புதிய மட்கலயத்தில் இட்டு கலாயவாயை கட்டி வைத்து கொள்ள வேண்டும்.

மருத்துவ பயன்கள் :

தோல் நோய்கள் :

Related image

 

இந்த மூலிகை செடி இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்குகிறது. சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோல் நோய்கள் போகும். கபத்தை கரைக்கும்.நாற்பது நாட்கள் உட்கொண்டால் மேனி அழகு கூடும்.

மஞ்சள் காமாலை :

Image result for மஞ்சள் காமாலை :

சிவக்கரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த வல்லது. சிவகரந்தையின் வேர் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.சிவக்கரந்தை போடி மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.

சிறுநீரக நோய் :

Image result for சிறுநீரக நோய் :

சிவக்கரந்தை பொடி சிறுநீரக நோய்களை போக்க வல்லது. மேலும் இது உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை போக்கும். சிவகரந்தை பொடி நல்ல பசியை தூண்டக்கூடிய ஒரு சிறந்த மூலிகை. அத்துடன் இது இரத்தத்தில் உள்ள மாசுக்களை நீக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert