தானிய வகைகள் அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. ஆனால் நாம் இன்று அனைத்தையும் மறந்து, மேலை நாட்டு உணவு முறைகளை தான் கையாண்டு வருகிறோம்.
இன்றைய நாகரீகமாக கருதும், மேலை நாட்டு உணவு முறைகள் நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த நோய்கள் நமது உயிருக்கு உலை வைக்கும் நோயாகவே மாறி விடுகிறது.
இன்று நாம் இந்த பதிவு பாசி பயரின் பயன்கள் பற்றியும் அவற்றின் நன்மைகள் பற்றியும் பாப்போம்.
பாசி பயறில் விட்டமின் பி9 மிகஅதிகளவும், பி1 விட்டமின் பி5 , பி6 , பி2 , விட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன. இதில் தாதுஉப்புக்களான செம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை மிகஅதிகளவும், மெக்னீசியம், மாங்கனீசு ஆகியவை அதிகளவும் காணப்படுகின்றன.
மேலும் இதில் செலீனியம், கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
இன்றைய தலைமுறையினரின் மிக பெரிய பிரச்சனையே உடல் எடை பிரச்னை தான். பாசி பயறு உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.பாசி பயறில் உள்ள புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து பசியை உண்டாக்கும் நொதியான ஹெர்லினின் செயல்பாட்டினை தடைசெய்கிறது.
மேலும் பாசி பயிறு, வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. எனவே பாசி பயறினை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.
பாசி பயிரை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமான பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். இப்பயறில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் குடலில் உணவுப்பொருட்கள் நன்கு செரிக்க உதவுகிறது.
மேலும், இது செரிமானப்பாதையில் நல்ல பாக்டீரியாக்களின் செயலினைத் துரிதப்படுத்தி உணவினை நன்கு செரிக்க உதவுகிறது. மேலும் இப்பயிறில் காணப்படும் கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானம் அடையும் தன்மையைக் கொண்டுள்ளதால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.
இரத்தம் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து பாசி பயறு நமக்கு விடுதலையை தருகிறது. பாசி பயறில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
இப்பயறில் காணப்படும் புரதச்சத்தானது இரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடிய என்சைம்களின் செயல்பாடுகளைத் தடைசெய்து, இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது.
பாசி பயறில் இதய பிரச்சனைகளை நீக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. பாசி பயறில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் கெட்ட கொழுப்புகள் உடலில் சேருவதைத் தடை செய்கின்றன.
மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமான கேட்ட கொழுப்புகளை கரைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
பாசி பயறு கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாசி பயறில் ஃபோலேட்டுகளை அதிகளவு உள்ளது. இந்த சத்துக்கள் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு குழந்தையானது குறைபாடுகள் இன்றி பிறக்கவும் வழிவகுக்கிறது.
கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவையும் இப்பயறில் காணப்படுகின்றன.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…