பெண் குழந்தைகளின் பருவ மாற்றத்தை பக்குவமா சொல்லுங்க..!!

Tell me if the puberty of girls is mature

பெண்குழந்தைகள் தங்கள் பருவ வயதை அடையும் போது உடலில் ஏற்ப்டும் மாற்றங்களால் மனதளவில் குழம்பியும் பயந்தும் போகின்றனர்.

அந்தந்த வயது வரும்போது, அதன் உடலில் ஏற்படப்போகும், பாலியல் ரீதியான மாற்றங்களை அக்குழந்தையின் தாயோ, மூத்த‍ சகோதரியோ, அத்தையோ, பாட்டியோ, சொல்லி விளங்க வைக்க‍ வேண்டும். அதாவது அந்த மாற்ற‍ங்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்களால்தான் நிகழ்கின்றன‌ இந்த மாற்ற‍ங்கள் நிகழ்ந்தால், நீ சிறுமி என்ற அந்தஸ்த்தில் இருந்து பெண் என்ற நிலைக்கு உயர்கிறாய்! என கூறவேண்டும்.

அக்குழந்தையின் மனதில் பயத்தை போக்குவதன் மூலம், அக்குழந்தைக்கு தைரியத்தையும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அக்குழந்தை பூப்பெய்தும் போது தனது உடலில் ஏற்படும் மாற்ற‍ங்களை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தையும், மனோதிடத்தையும் ஏற்படுத்த‍ வேண்டும்.

அப்ப‍டி உங்களுக்கு சொல்ல‍த் தெரியவில்லை என்றால், தகுதியான பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும். அவரும் உங்கள் முன்னிலையிலேயே அக்குழந்தையின் உடலில் ஏற்படும் மாற்ற‍ங்களை தெரியப்படுத்தி, அக்குழந்தையின் மனதை பக்குவப்படுத்த‍லாம்.

பெண்ணுக்கு ஏற்படக்கூடிய பொதுவான பாலியல் மாற்ற‍ங்கள்,மார்பகங்களில் ஏற்படக்கூடிய மாற்ற‍ங்கள் மற்றும் பெண் உறுப்பில் ஏற்படக்கூடிய மாற்ற‍ங்கள் (முடி வளர்தல் உட்பட) குறித்து விளக்கமளித்து பயத்தை போக்கவேண்டும்.

மாத விடாய் வருவதால் உடலில் ஏற்படும் மாற்ற‍ங்கள் :

1. எத்தனை நாளைக்கு இரத்தப் போக்கு இருக்கும்?

2. மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படுமா?

3. மாதவிடாய் காலத்தில் தான் தலைக்கு குளிக்கலாமா?

4. மாதவிடாய் காலத்தில் தான் விளையாடலாமா?

5. மாதவிடாய் காலத்தில் மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச‍ரிக்கைகள் என்னென்ன?

என்பதை பற்றி பெண் குழந்தைகளுக்கு பக்குவமாக சொல்லி தர வேண்டும். ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கண்டிப்பாக சொல்லி தரவேண்டும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்