டீயா.. காபியா.. எது நல்லது?
Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் .
டீயின் நன்மைகள்;
டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க உதவுகிறது . தேநீரில் உங்கள் உடலில் இருக்க வேண்டிய நீர்ச்சத்தை காபி அளித்தாலும் தேநீரில் உள்ள நீர் பொருட்கள் நீங்கள் வியர்த்திற்கும் பொழுது வெளியேறும் வியர்வைக்கு பதிலாக நீரை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
தேநீர் நம்மை நீண்ட நேரம் இயங்க வைக்கிறது. காபி மற்றும் தேநீரில் கஃபைன் என்ற பொருள் ஒரே அளவில் காணப்பட்டாலும் டீயை ஒப்பிடும் பொழுது காபி ஒருவித தூக்க உணர்வை தரும். ஆனால் டீயை அறுந்துபவர்கள் நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இயங்குவதை காணலாம்.
உடல் பருமன்;
கிரீன் டீ தொடர்ந்து அருந்தும் பொழுது உடல் எடை கணிசமாக குறைகிறது. கிரீன் டீயில் உள்ள குறைவான கலோரி அளவு தான் இதற்கு காரணம் கிரீன் டீ மோசமான கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.
மன அழுத்தம்;
மன அழுத்தம் டென்ஷன் குறைகிறது. ஒருவர் டீ அருந்துவதால் என்ன நடக்கிறது டென்ஷன் எப்படி குறைகிறது என்றால் இப்பொழுதெல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கப் டீ அருந்தி விட்டு வரலாம் என்று எண்ணுகின்றனர்.
குறிப்பாக கிரீன் டீயில் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருட்கள் அடங்கி இருப்பதால் ஒரு கப் காபியை விட ஒரு கப் டீ மிகவும் சிறந்ததாக உள்ளது. மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய ஹார்மோனின் அளவுகளை குறைக்கிறது.
புற்றுநோய்;
புற்று நோய் வளரக்கூடிய செல்களை தடை செய்கிறது. குறிப்பாக புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் புற்றுநோய் உருவாகக்கூடிய செல்களை வெளியேற்றுகிறது.
1994 இல் தேசிய புற்றுநோய் நிறுவனம் தனது பத்திரிக்கை செய்தியில் கிரீன் டீ அருந்தும் சீனர்கள் 60%சதவீதம் பேருக்கு உணவுக் குழாய் புற்றுநோய் ஆபத்து குறைவாக உள்ளது என்று ஆராயப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி;
டீ அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது .உடல் ஆரோக்கியமாக இருக்க டீ அருந்துவது நல்லது. தேநீரில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வயது முதிர்வை தடுக்கிறது.
நாம் காபி அருந்துவதை விட டீ பல நன்மைகளை தருகிறது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் டீயை அருந்தி நாம் பல நன்மைகளை பெறலாம்.