ஸ்வீட் பிரியர்களே..! இனிப்புச் சுவை பிடிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதாம்..

sweet

Sweet-இனிப்பு பதார்த்தங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு வர காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

இனிப்பு பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுவது  அதற்கு அடிமையாகி  இருப்பதோ அல்லது பழக்கமோ இல்லை உண்மை என்னவென்றால் நம் உடலானது இனிப்பை நோக்கி இழுக்கிறது. ஏனென்றால் அந்த சுவை நம் உடலுக்கு தேவைப்படுகிறது.

ஒவ்வொரு சுவைக்கும் ஒரு குணம் உள்ளது. எந்த சுவை நம் உடல் கேட்கிறதோ அது நம் செல்களுக்கு தேவைப்படுகிறது என்று அர்த்தம். இனிப்பு என்பது குளுக்கோஸ் அதாவது உடனடியான எனர்ஜி. நம் உடலுக்கு உடனடியாக எனர்ஜி தேவை என்றால் அது இனிப்பு சுவையை தான் நாடும் .

காரணங்கள்;

பொதுவாக இந்த உணர்வு சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் இருக்கும் ஏனென்றால் அவர்கள் எப்போதுமே இனிப்பை சாப்பிடுவதில்லை என்பதால் அந்த உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.

சுகர் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் ,தூக்கமின்மை மற்றும் காயங்கள் ,அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு அதற்காக மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்த உணர்வு இருக்கும்.

மேலும் அதிக சர்க்கரை இருப்பவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள் இதனால் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், சிங்க்  போன்ற தாதுக்கள் வெளியேறும். இதனால் செல்கள் சக்தியை இழக்கிறது .இந்த மெக்னீசியம் பொட்டாசியம் சத்துக்கள் இதய தசைகளுக்கும்  மூளையின் செயல்பாட்டிற்கும் மிக அவசியமானது.

இது  குறைந்தால் உடலில் எனர்ஜி குறைய துவங்கும். அதனால் தான் உடலானது குளுக்கோசை தேடுகிறது. அதுமட்டுமல்லாமல் குறைந்த அளவு சுகர்  இருப்பவர்களுக்கு இன்சுலின் அதிகமாக சுரக்கும். இதனால்  நம் உடலுக்கு எனர்ஜி செல்வதை தடை செய்யும். இதனாலும் கூட செல்களுக்கு எனர்ஜி தேவைப்படுகிறது .

இப்படிப்பட்ட நேரங்களில் தான் இனிப்பு பதார்த்தங்களை நம் உடலானது தேடுகிறது. இந்த லோ சுகர் என்பது தற்போது சிறியவர்களுக்கு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது ஏனெனில் அதிகமாக அவர்கள் கேக் , சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுகிறார்கள். இதில் குளுக்கோஸ் அதிகம் உள்ளது .

இதனால் இன்சுலின் அளவும்  அதிகமாக சுரக்கிறது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் பசி என்ற உணர்வுதான் இனிப்பை நாடுகிறது .மேலும் செல்களுக்கு தேவையான குளுக்கோஸ் இல்லாமையும் தான்.

தீர்வுகள்;

பசி உணர்வை தவிர்க்க ப்ரோட்டீன் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் . தினமும் நாம் உண்ணும் உணவில் சாதம் ஒரு பங்கு என்றால் பச்சை காய்கறிகள் + புரதம் நிறைந்த உணவு+ நல்ல கொழுப்பு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

நல்ல கொழுப்பு என்றால் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் , அல்லது தேங்காய் எண்ணெய் உணவுக்குப் பின் 1 ஸ்பூன்  எடுத்துக்கொள்வது நல்லது. இதய  நோயாளிகள் என்றால் இதனை தவிர்க்க வேண்டும். அப்படி எண்ணெய்  எடுக்க முடியவில்லை என்றால் ஒரு கைப்பிடி வேர்க்கடலை எடுத்துக் கொள்ளலாம் .இது மிகச்சிறந்த புரதம் மற்றும் நல்ல கொழுப்பு உள்ள உணவாகும்.

பச்சை காய்கறிகளில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதுபோல் உணவு  எடுத்துக் கொள்ளும் போது செல்களுக்கு   தேவையான சத்து  கிடைத்து விடும். ஒருவேளை உங்களுக்கு அமிலத்தின் அளவு குறைவாக இருக்கும் போதும் இனிப்பு சாப்பிடும் உணர்வு ஏற்படலாம் .

அப்படி இருந்தால் ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு ஸ்பூன் சுடு தண்ணீரில் கலந்து சாப்பிடுவதற்கு முன் எடுத்துக் கொள்ளவும். உணவு இடைவேளைகளில் புரதம் மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக முளைகட்டிய பச்சை பயிறு எடுத்துக் கொள்ளலாம்.

அல்லது கறிவேப்பிலை ,1 துண்டு இஞ்சி, சிறிதளவு மிளகு இவற்றை அரைத்து சாறெடுத்து குடித்து  வரலாம் ,  இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் மூளையில் டோபமைன் என்ற  மகிழ்ச்சி ஹார்மோனை சீராக சுரக்கச் செய்யும். இதன் மூலமும் இனிப்பு சாப்பிடும் உணர்வு குறைக்கப்படும்.

ஆகவே இனிப்பு பதார்த்தத்தை சாப்பிடும் உணர்வை கட்டுப்படுத்துவதை விட மாற்றத்தான் வேண்டும், நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கும் போது திடீரென ஒரு நாள் இனிப்பை பார்த்து விட்டால் அதிகமாக தான் எடுத்துக் கொள்வீர்கள். அதனால் மாற்றுவதே சிறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்