மன அழுத்தத்தை போக்க சூப்பர் டிப்ஸ்!
இன்றைய நாகரீகமான உலகில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குழந்தைகள் இன்று விளையாடும் வயதிலேயே பள்ளி சேர்க்கப்படுகின்றனர். இதனால் இவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
தற்போது இந்த பதிவில் மன அழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
இசை
இசை என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரு விதமான மாற்றத்தை அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் இசையை கேட்டாலும், அது மனஅழுத்தத்தை போக்கி மனதிற்கு அமைதியை அளிக்கிறது.
நெருக்கமான பேச்சு
அனைவருக்குமே மிகவும் நெருக்கமான நண்பர்கள் இருப்பது வழக்கம். மனஅழுத்தம் ஏற்படும் நேரங்களில், நமது மனதிற்கு நெருக்கமானவர்களை அழைத்து, அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும்.
இயற்கை
இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அந்த வகையில் இயற்கை நமக்கு எல்லா வகையிலும் உதவுகிறது. மன அழுத்தமான நேரங்களில் நாம் இயற்கையை ரசிக்கும் போது, அதில் இருந்து விடுபடலாம்.