உடல் எடையை குறைக்க எளிமையான முறையில் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள். அதனால் அவர்கள் உடல் எடையை குறைப்பதில் வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றனர். உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்காக முதலில் உங்களுக்கு அவசியமானது மன உறுதி. மன உறுதி இருந்தாலே உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். உடலில் அதிகமான கலோரிகளை எரிக்க வேண்டும். அப்போது தான் உடல் எடை குறையும். அதனால் உடல் எடையை குறைக்க தகுந்த உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அவசியம்.
அதேநேரம், உணவில் சத்துக்களும் இருக்க வேண்டும். அதில் கலோரி குறைவாக இருக்க வேண்டும். முதலில் உடல் எடையை நீங்கள் குறைக்க விரும்பினால் அடிக்கடி பசிக்காமல் இருப்பது அவசியம். பசி உணர்வை ஏற்படுத்தாமல் வயிறுக்கு நிறைவாக இருக்க கூடிய உணவுகளில் ஒன்று தயிர். இதில் புரத சத்து இருக்கிறது. மேலும் தயிர் உடலுக்கு குளிர்ச்சியை வழங்குகிறது. அதனால் தயிர் வைத்து செய்ய கூடிய ரைதா வகைகளை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளரி ரைதா: வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சியானது. அதில் நீர் சத்துக்கள் நிறைந்து இருக்கும். அதனால் உடல் எடை குறைய பல்வேறு வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ரைதாவில் கொழுப்பு கிடையாது. புளிக்காத தயிருடன் வெள்ளரிக்காய்களை சேர்த்து ரைதாவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். இதன் சுவைக்காக சற்று மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொண்டு சாப்பிடலாம்.
ஜீரக ரைதா: நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் மருத்துவ குணம் நிறைந்து உள்ளது. இஞ்சி, ஜீரகம், மிளகு என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்கள். அதிலும் ஜீரகம் உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ஜீரகத்தில் தைமோல் என்ற பொருள் இருக்கிறது. இது நமது உடலில் பசி உணர்வை ஏற்படுத்துவதை குறைகிறது. ஜீரகத்தை ரைதாவுடன் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடல் எடை குறையும். இது உங்களின் தொப்பையை குறைக்கவும் பயன்படுகிறது.
காய்கறி ரைதா: பொதுவாகவே காய்கறிகள் உடல் எடை குறைப்பதில் முக்கியம் வாய்ந்தது. இதில் நீங்கள் குடை மிளகாய், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை ரைதாவுடன் சேர்த்து கொள்ளுங்கள். இதனால் உணவும் சுவையாக இருக்கும். அதே நேரத்தில் உங்களுக்கு உடல் எடையை குறைக்கவும் இந்த காய்கறி ரைதா உங்களுக்கு உதவியாக இருக்கும்.
புதினா ரைதா: புதினா மிகவும் குளிர்ச்சியான பொருள். அதனால் இதனை ரைதாவுடன் சேர்த்து சாப்பிடலாம். புதினா அல்லது கொத்தமல்லி இவற்றில் எதனை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உங்களுக்கு எது பிடிக்குமோ அதனை பயன்படுத்துங்கள். புதினாவை நன்கு அரைத்து அதனை ரைதாவுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது உங்களது உடல் எடையை குறைக்க உதவும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…