Stomach Ulcer-அல்சர் வர காரணமும் குணமாக்கும் உணவு முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
நவீன வாழ்க்கை முறையில் நேரத்திற்கு சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் ஆகிவிட்டது .அதனால்தான் அல்சர் போன்ற நோய்கள் வர காரணமாகிறது. நம் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்கள் தான் அல்சர் என கூறப்படுகிறது.
இரைப்பை புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் எனவும் உணவுப் பாதையில் ஏற்படும் புண்களை ஈசோபேஜியல் அல்சர் எனவும் சிறுகுடலின் முன் ஏற்படும் புண்களை டியோடினல் அல்சர் எனவும் கூறப்படுகிறது.
நம் உண்ணும் உணவு செரிமானம் ஆக இரைப்பை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சுரக்கும் .வழக்கமாக நாம் சாப்பிடும் நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது அல்லது பசி எடுக்கும் போது சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் இரைப்பையில் சுவர்களை பாதித்து புண்களை ஏற்படுத்துகிறது .
அது மட்டுமல்லாமல் பாக்டீரியா தொற்று ,மன உளைச்சல், கவலை ,தவறான உணவு பழக்கங்களான அதிக காரமுள்ள உணவு எடுத்துக் கொள்வது, டீ காபி அதிகம் எடுத்துக்கொள்வது , மது அருந்துவது போன்றவற்றாலும் அல்சர் வர காரணமாய் இருக்கிறது.
அல்சர் உள்ளவர்கள் டீ காபி குடிப்பதை நிறுத்த வேண்டும்.காபியில் உள்ள அமிலத்தன்மை நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தும். மேலும் கார உணவுகள் மிளகாய், மிளகு போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும் .
பால் குடிப்பதால் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது இதனால் பால் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது .இது புண் ஆறுவதை தாமதபடுத்துகிறது . மேலும் கார்பனேட் நிறைந்த குளிர்பானங்கள் மற்றும் மது அருந்துதலையும் நிறுத்த வேண்டும்.
அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் தயிர் தினமும் மதிய உணவில் எடுத்துக் கொள்வது சிறந்தது .தயிர் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும் தன்மை உள்ளதால் தயிர் சிறந்த உணவாகும். மேலும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாள் ஒன்றுக்கு இரண்டு கப் அளவாது நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முட்டைக்கோசை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள குளுட்டமைன் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றக்கூடியது .
அது மட்டுமல்லாமல் முள்ளங்கி, புடலங்காய் ,பூசணிக்காய், வெள்ளரிக்காய் ,தர்பூசணி, நுங்கு, இளநீர் போன்றவற்றையும் உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களில் திராட்சை பழத்தை வாரத்திற்கு மூன்று நாளாவது ஜூஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.சப்போட்டா ,வாழைப்பழம் தினமும் எடுத்துக்கொள்ளவும் .
புதினாவையும் ஜூஸ் ஆகவோ அல்லது புதினா சாதம், சட்னி போன்றவையாகவோ செய்து சாப்பிடலாம். மணத்தக்காளி கீரை வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றக் கூடியது. அதனால் மணத்தக்காளி கீரையும் வாரத்திற்கு மூன்று நாட்கள் ஆவது எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் பருப்பு வகைகளில் பாசிப்பயறு அதிகம் எடுத்துக் கொள்ளலாம். தேங்காய் பாலை காலை வெறும் வயிற்றில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்துக்கொள்ளும் போது விரைவில் புண் ஆறும் அல்லது மஞ்சள் பூசணியை ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆகவே தொடர்ந்து இந்த உணவு முறையை கடைப்பிடித்து வந்தால் விரைவில் அல்சர் குணமாகும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…