தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? இதோ அதற்கான தீர்வு..!

insomnia

Insomnia– தூக்கமின்மை ஏற்பட காரணம் மற்றும் அதற்கான தீர்வையும் இப்பதிவில் காணலாம்.

தூக்கமின்மை:

தூக்கமின்மை என்பது இரவில் தூக்கம் வராமல் இருப்பதும், ஏதேனும் நோயின் முன் அறிகுறியாக இருப்பதும் ஆகும்.இன்று பெரும்பாலும் அனைவரும் பாதிப்படைந்த ஒன்று தூக்கமின்மை . குறிப்பாக இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த தூக்கம் இன்மை அதிகம் ஏற்படுகிறது.

இதன் விளைவாக தலைவலி மற்றும் பகல் பொழுதில் எந்த ஒரு செயலிலும் கவனம் செலுத்த முடியாமை , நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நாளமில்லா சுரப்பிகள்  பாதிப்படைவது , முடி கொட்டுதல் போன்ற பிரச்னை ஏற்படும்

மேலும் சரியாக தூங்கா விட்டால் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கார்டிசோல்   ஹார்மோனின் அளவு அதிகரித்து விடும்.  இது சரும  கொலாஜினை அளிக்கும். இதனால் சருமம் பொலிவிழந்து காணப்படும்.

தூக்கமின்மை ஏற்பட காரணம்:

தூக்கமின்மை ஏற்பட முக்கிய காரணம் மன அழுத்தம்,அதிகமாக செல்போன் ,டிவி ,கணனி பார்ப்பது ,அதிக படியான வேலை பளு,அதிகமாக யோசித்து கொண்டே இருப்பது ஆகும் .

தூங்குவதற்கு முன் செய்ய வேண்டியவை:

தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு குளித்து விட வேண்டும். பிறகு கண் இமைகளை மூடி மூடி திறக்கவும் . பிறகு கண்களை லேசாக மசாஜ் செய்து விடவும்.இதனால் கண் சோர்வடைந்து தூக்கத்தை ஏற்படுத்தும் .

அடுத்த கட்டமாக மூச்சு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் மாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டாலும் இரவில் நன்றாக தூக்கம் வரும். மேலும் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் இதனால் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்  சுரக்கும்.

மாலை ஐந்து மணிக்கு மேல் டீ, காபி போன்றவற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது. இதில் உள்ள கஃபின் தூக்கத்தை தடை செய்யும்.படுக்கையில் அமர்ந்து கொண்டே ஏதேனும் புத்தகங்களை படிப்பது அல்லது காதுகளுக்கு இதமான பாடல்கள் கேட்பது, கதைகள் கேட்பது போன்றவற்றையும் மேற்கொள்ளலாம்.

தூக்கத்தை ஏற்படுத்தும் உணவுகள்:

இரவில் மாவுச்சத்து அதிகம் உள்ள இட்லி, தோசை போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். இது நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.சீரகத்தூளுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும் போதும் நல்ல தூக்கம் வரும்.

பால், பாதாம், வாழைப்பழம் போன்றவற்றையும் இரவில் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இந்த பொருள்களில் டிரப்டோபன் என்ற ரசாயனம் உள்ளது. இது மெலடோனின் சுரக்க உதவுகிறது. இந்த மெலடோனின் ஹார்மோன் இரவில் அதிகமாக சுரக்கும், இது சுரந்தால்தான் தூக்கம் நன்றாக வரும்.

2 ஸ்பூன் கசகசாவை சிறிது பால் ஊற்றி அம்மியில் அரைத்து [மிக்ஸியில் அரைக்க கூடாது] அதை காய்ச்சிய வெதுவெதுப்பான பாலுடன் பணங்கற்கண்டு சேர்த்து இரவில் பருகிவர நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

முக்கிய குறிப்பு:

கசகசாவை அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. இது ஒரு வித போதையை ஏற்படுத்தும். அதுபோல் நீண்ட நாட்களும் கசகசாவை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஆனால் இது தூக்கமின்மைக்கு ஒரு நல்ல தீர்வை கொடுக்கும்.

எனவே தூக்கமின்மையால்  அவதிப்படுபவர்கள் மேற்கண்ட குறிப்புகளை பயன்படுத்தி நல்ல தூக்கத்தை பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்