பல் ஈறு வீக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலேயே சரி செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ…

Published by
K Palaniammal

பல்ஈறுகள்  வலு விழுந்து விட்டாலோ அல்லது கிருமிகள் புகுந்து விட்டாலோ பல் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு அதனால் அதிக வலியை ஏற்படுத்தும். இது வாய் மட்டுமல்லாமல் காதுவரை அந்த வலி  ஏற்படும் பெரும்பாலும் இந்த ஈறு வலி குளிர் காலத்தில் அதிகம் ஏற்படும் இவற்றை வீட்டிலேயே மிக எளிமையான முறையில் குணப்படுத்தலாம்.அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த ஈறு பிரச்சனை  இருக்கும்போது கடினமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மிக எளிமையான சாப்டான உணவுகள், விட்டமின் சி சத்து நிறைந்த பழ  சாறுகளை எடுத்துக் கொள்ளலாம். விட்டமின் டி அதிகம் நிறைந்துள்ள பால் எடுத்துக் கொள்ளலாம்.

வெறும் பிரஸ் மட்டுமே வைத்து வீக்கம் உள்ள இடத்தில் மெதுவாக அழுத்தி விடவும் இதனால் அதிலுள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படும் ,அந்த கெட்ட நீர் வெளியேறிவிட்டால் வலி குறைந்து விடும்.

கல் உப்பு 

காலையில் நீங்கள் பயன்படுத்தும் பர்பசையுடன்  சிறிது உப்பு கற்களையும் சேர்த்து பல் துலக்கவும் இந்தக் கல் உப்பு பல்லின் வேர் பகுதி வரை சென்று கிருமிகளை அகற்றும் தன்மை கொண்டது.

சூடான நீரில் ஒரு காட்டன் துணியை  நனைத்து முகத்தில் ஈறு வலி இருக்கும் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம் அது போல் ஐஸ் கட்டியை துணியில் சுற்றி வீக்கம் இருக்கும் பகுதிகளில் வைக்கவும் இதனால் வலி குறையும்.

மஞ்சள் 

மஞ்சளை நீருடன் பேஸ்ட் பதத்தில் கலந்து ஈறு வலி  உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும், பிறகு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்து விட வேண்டும் இதை இரு முறை செய்ய வேண்டும்.

கற்றாழை 

சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை கழுவி விட்டு வலி உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து ஐந்து நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து விட வேண்டும் இது ரத்த கசிவை நிறுத்தும்.

பற்களில் விட்டமின் டி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது சத்துக்கள் குறைவினால் முதலில் பாதிக்கப்படுவது பற்களும் ஈறுகளும் தான்.

நம் ஈறுகள் எந்த அளவிற்கு சுகாதாரமாக உள்ளதோ அதுவே பற்களின் ஆரோக்கியத்தை வழி வகிக்கிறது ஈறுகளில் சரியான பராமரிப்பு கொடுத்தாலே பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

Recent Posts

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

1 hour ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

3 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

4 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

4 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

5 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

6 hours ago