தைராய்டு பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப கண்டிப்பா இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க..!

இன்று பெரும்பாலனவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தைராயிடு. இந்த பிரச்சனையால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னை உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
தைராயிடு என்றால் என்ன?
தைராய்டு என்பது ஒவ்வொரு மனிதர்களுடைய கழுத்தில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இது பட்டாம்பூச்சி வடிவமைப்பைக் கொண்டது. இந்த சுரப்பியானது மூச்சுக்குழாயின் முன் புறத்தில் அமைந்துள்ளது. இது இரண்டு முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
தைராக்ஸின் மற்றும் ட்ரை ஐடோ தைராக்ஸின் என்ற இரண்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் தான் உடலில் உள்ள செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது வளர்ச்சி, வளர் சிதை மாற்றம், மனநிலை, இதயத்துடிப்பு, உடல் வெப்பநிலை உள்ளிட்ட உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஹார்மோன் சுரப்பியில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் நமது உடலில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சுரப்பி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரந்தால், நமது உடலில் பிரச்னை ஏற்படுகிறது.
தைராயிடு பிரச்சனை
தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யவில்லை என்றால், ஹைப்போதைராய்டிசம் என்ற பிரச்னை ஏற்படும். அதே சமயம், தைராய்டு சுரப்பி அதிகமாக ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் போது, ஹைப்பர்தைராய்டிசம் என்ற பிரச்னை ஏற்படும்.
ஹைப்போதைராய்டிசத்தின் அறிகுறி
ஹைப்போதைராய்டிசம் பிரச்னை உள்ளவர்களுக்கு, எடை அதிகரிப்பு, சோர்வு, குளிர், மலச்சிக்கல், சருமம் வறண்டு போதல், தலைமுடி உதிர்வு, மூட்டுவலி, தசைவலி, பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, ஆண்களுக்கு மலட்டு தன்மை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
ஹைப்பர்தைராய்டிசம் அறிகுறி
ஹைப்பர்தைராய்டிசம் பிரச்னை உள்ளவர்களுக்கு வேகமான இதயத் துடிப்பு, அதிகப்படியான வியர்வை, எடை இழப்பு, பதட்டம், மலச்சிக்கல், சருமம் மெல்லியதாகி லேசாக மாறுதல், தசை பலவீனம், பதட்டம், எரிச்சல், தூக்கக் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள் போன்ற பிரச்னை ஏற்படும்.
இந்த அறிகுறிகளை மேற்கொள்ள சில வழிகள்
தைராயிடு பிரச்னை உள்ளவர்களுக்கு மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டால், நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இவற்றை மேற்கொள்ளலாம். அதன்படி, போதுமான அளவு தூங்குங்கள், ஓய்வெடுங்கள், மன அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவும், ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
தைராயிடு பிரச்சனை உள்ளவர்களுக்கு உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியமானது ஆகும். தைராயிடு சுரப்பியின் செயல்பாட்டிற்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் முக்கியமானது ஆகும். இந்த பிரச்னை உள்ளவர்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
அதே போல் தானிய வகைகளிலும் அதிகமான நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகிறது. எனவே வாரத்தில் 2 அல்லாது 3 முறையாவது தானியவகைகளை உட்கொள்வது அவசியமாகும். கோதுமை, ஓட்ஸ், பார்லி மற்றும் பிற முழு தானியங்களை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம்.
செலினியம் தைராயிடு சுரப்பியின் செயல்பாட்டிற்கு அவசியமான ஒரு தாது ஆகும். எனவே, வாரத்திற்கு இரண்டு முறையாவது, தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் மீன், நண்டு, இறால் மற்றும் பிற கடல் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அதேபோல், இறைச்சி மற்றும் பால் பொருட்களில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக காணப்படுகிறது. எனவே வாரத்திற்கு 2 அல்லது 3 முறையாவது இறைச்சி மற்றும் பால் பொருட்களை சாப்பிடுவது நல்லது.
சாப்பிடக்கூடாத உணவுகள்
தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சிவப்பு இறைச்சி, முழு கொழுப்புள்ள பால் பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் பாதாம் போன்ற கொட்டைகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
அதேபோல், காஃபின் மற்றும் ஆல்கஹால் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்க கூடும் என்பதால், இந்த பிரச்னை உள்ளவர்கள் அப்படிப்பட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கலாம்.
தைராய்டு ஹார்மோன்களை உருவாக்க யோடின் அவசியம் என்றாலும், அதிகப்படியான யோடின் தைராய்டு பிரச்னைகளை மோசமாக்க கூடும் என்பதால், காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள யோடின் அளவைக் கவனத்தில் கொண்டு உட்கொள்வது மிகவும் அவசியமாகும்.
இரசாயனங்கள் நிறைந்த உணவுகள் தைராய்டு சுரப்பியின் செயல்பாடே பாதிக்கக்கூடும் என்பதால், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் மற்றும் பீர் போன்ற பானங்கள் அருந்துவதை தவிர்க்கலாம். தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொண்டு, உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025