இறைவன் நமக்கு வரமாக அளித்த இயற்கையில், வில்வக்கனி ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். வில்வம் கிளைகளோடு உயர்ந்து வளரக்கூடிய ஒரு மரம் ஆகும். இதன் அடிமரம் பருத்து, பட்டை பிளவுபட்டு சற்று வெண்மை நிறம் கொண்டிருக்கும். இதன் அடிமரத்தில் முட்கள் இருக்காது.
ஆனாலும் இதன் இளங்கிளைகளில் நீண்ட கூர்மையான முட்கள் இருக்கும். ஒவ்வொரு காம்பிலும் மூன்று இலைகள் இருக்கும். இதன் இலைகள் அகலமாகவும், கூர்மையாகவும் இருக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. கசக்கி முகர்கையில் கற்பூரத்தைப் போல சுகமான மணத்தைத் தரக்கூடியவை. இது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.
வில்வக்கனியின் தன்மைகள் :
வில்வக்கனி சற்று மயக்கம் தரும் தன்மையது. வில்வக் கனியை சர்பத்தாகக் குடிப்பது வழக்கம். இதன் உட்சதையை நீக்கிய ஓட்டை மருந்துகள் வைக்கும் குப்பிகளாகப் பயன்படுத்துவர். வில்வத்தில் பல வகைகள் உண்டு. அவற்றுள் காட்டு வில்வம் மற்றும் தோட்ட வில்வம் எனும் இவை இரண்டும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
எலும்புமுறிவு :
நம் முன்னோர்கள் உடைந்த எலும்புகளை விரைவில் ஒன்று சேர்க்க உலர்ந்த முற்றிய வில்வக் காய்களைச் சூரணித்து மஞ்சள் தூளும் நெய்யும் சேர்த்து விழுதாகக் குழைத்து மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தியதாகத் தெரிய வருகிறது.மேலும் இது ரத்த சோகையையும் கண், காது ஆகிய உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு நோய்களையும் குணமாக்கும் தன்மையது.வயிற்றில் அமிலத்தன்மை மிகுதியால் ஏற்படும்குடற்புண்ணை ஆற்றும் வல்லமை உடையது.
வலி நிவாரணி :
வில்வக்கனி வைட்டமின் ‘சி’ சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிற ரத்தசோகை, சோர்வு, அசதி, எங்கேனும் குருதி வெளிப்பாடு, கை, கால்களில் தோன்றும் வலி, உடலின் சில பகுதிகளில் ஏற்படும் வீக்கம், ஈறுகளில் புண்கள் உண்டாகுதல் அதன் விளைவாக ஏற்படும் பற்களின் ஆட்டம் ஆகியவற்றை சரி செய்யும் அளவுக்கு வில்வப் பழத்தில் வைட்டமின் சி சத்துவம் செறிந்துள்ளது.
சுவாச பிரச்சனைகள் :
வில்வத்தினின்று பெறப்படும் எண்ணெய் ஆஸ்துமா என்னும் சுவாசக் கோளாறுகளையும் நுரையீரல் பற்றிய நோய்களையும் நீக்கும் தன்மையது. இந்த எண்ணெயை தலைக்குக் குளிக்குமுன் சிறிது நேரம் தலையில் தேய்த்து வைத்திருந்து குளிப்பதால் தலை நீரேற்றம் என்னும் சைனஸ் பிரச்னை தவிர்க்கப்படுகிறது.
சிறுநீரக கோளாறு :
வில்வம் சிறுநீரகக் கோளாறுகளை சீர்செய்யக் கூடிய சிறந்த மருந்தாகிறது. வில்வக் கனி பசியைத் தூண்டக்கூடியது, குமட்டலைத் தடுக்கக் கூடியது. வில்வக்கனிச் சாறு இதயம் மற்றும் மூளைக்குத் தேவையான சத்துக்களைத் தந்து அவற்றை பலப்படுத்தக் கூடியது. பூக்களைக் கொண்டு தயாரிக்கப் படும் தீநீர் காக்காய் வலிப்புக்கு மருந்தாகிறது.
வில்வக்கனி பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது மட்டுமல்லாமல், நீண்ட ஆயுளை கொடுக்க கூடியது என்றும் கூட சொல்லலாம்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…