அடடே… இப்படி ஒரு டயட்டா….!!! நீரிழிவு நோய்க்கான சூப்பர் டயட்…!!!

Default Image

இன்றைய உலகில் பாஸ்ட் புட் என்கிற உணவு முறை வந்து கலாச்சாரத்தையே சீர்கேடாக்கியுள்ளது. இந்த உணவு முறை பல மனிதர்களின் ஆயுசு நாட்களை குறைத்து, பல நோய் என்னும் கலைகளை வித்து மரணம் என்னும் பள்ளத்தில் தள்ளுவதற்கான அனைத்து வழிகளையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் நீரிழிவு என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகமானோர்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பு சுவை அவசியம் :

நீரிழிவு வந்துவிட்டது என்பதால் எல்லா உணவுகளையுமே தியாகம் செய்துவிட்டு கழிவிரக்கத்துடன் கட்டாயத்துக்காக எதையேனும் உண்ண வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. உணவுமுறையில் ஓர் ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டும் என்பதைத்தான் நீரிழிவு நமக்கு நினைவுபடுத்துகிறது.

Related image

நீரிழிவு நோயாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் இனிப்புச்சுவை தேவையாகும். அவர்களுக்கு இனிப்பு எடுத்துக்கொள்ளும் அளவுகள்தான் மாறுபடுமே தவிர, அவர்களுக்கும் கட்டாயம் இனிப்புச்சுவை தேவை.

கடல் உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு :

நீரிழிவாளர்கள் அசைவ உணவு எடுத்துக்கொள்ளும்போது கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. குறிப்பாக, மீன் வகை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதிலும் சிறிய வகை மீன்களில் சத்துகள் மிகுதியாக இருக்கிறது.  பொதுவாகவே மீன்களில் நல்ல கொழுப்பு உள்ளது. இதய நோய் வராமல் காக்கும். ஓமேகா- 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது நம் சருமத்துக்கு மினுமினுப்பையும் எலும்புக்கு வலுவையும் தரும்.

Image result for கடல் உணவு

மீனில் உள்ள சத்துக்கள் வீணாகாமல் நமக்கு முழுவதுமாக கிடைப்பதோடு அதீத கொழுப்புச்சத்து உடலில் சேராமலும் பார்த்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்கெனவே அவியல் முறையில் மீனை சமைத்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

  • மீன் – 250 கிராம்
  • கொத்தமல்லித் தழை – 25 கிராம்
  • புதினா – 10 கிராம்
  • பூண்டு – 8 பல்
  • இஞ்சி – 10 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • பச்சைமிளகாய் -5
  • எலுமிச்சைப் பழம் – அரை மூடி
  • வாழை இலை- 1

செய்முறை :

மீனை வட்ட வடிவில் மெல்லியதாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, புதினா உப்பு, 4 துளி எலுமிச்சை சாறு போன்றவற்றை சிறிது தண்ணீர்விட்டு ஒன்றாக மிக்ஸியில் பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை மீனில் நன்கு தடவி வாழை இலையில் மூடி இட்லி தட்டில் வைத்து வேகவைத்தால் 20 நிமிடங்களில் சுவையான அவியல் மீன் தயார். வேகவைத்த மீனை வாழை இலையில் இருந்து எடுத்து அதன் மேல் கொஞ்சம் எலுமிச்சை சாறைப் பிழிந்து அதன் பிறகு சாப்பிடலாம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்