கழுத்தில் உள்ள சுருக்கத்தை நீக்கும் வழிமுறைகள்!
கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கும் வழிமுறைகள் :
பொதுவாக வயது ஏற ஏற நமது உடலுக்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.இதில் பெரும்பாலும் முகம்,கழுத்து,கைகள் போன்ற இடங்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
சூரியனிடமிருந்து வெளியாகும் புறவூதாக்கதிர்களின் மூலம் நமது உடலில் சுருக்கங்கள் தோன்றுகின்றன.இதனை போக்க நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு அவ்வளவாக கொடுப்பதில்லை.
இந்த சுருக்கங்களை எவ்வாறு போக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம்.
- நாம் வெளியில் சென்று வந்த உடன் முகத்தை கழுவுவதை போல கழுத்து பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டும் .இதனால் அப்பகுதியில் உள்ள அழுக்கு மற்றும் நச்சு தன்மைகள் வெளியேறும்.
- நாம் முகத்திற்கு சோப்பு பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள சருமத்தின் PH சமநிலையை மாற்றுகிறது.எனவே கெமிக்கல் கலந்த சோப்பை பயன்படுத்தாமல் மூலிகை க்ளென்சர் மற்றும் மூலிகை சோப்பை பயன்படுத்தலாம்.
- போட்டுலினம் டாக்ஸின் ஊசி மற்றும் எஸ்தடிக் அறுவை சிகிச்சை போன்றவற்றை பயன்படுத்தி கழுத்து சுருக்கங்களை குறைக்கலாம்.
- வைட்டமின் சி மற்றும் ரெட்டினால் அடிப்படை கொண்ட க்ரீம் அல்லது சீரம் பயன்படுத்தலாம்.இதனால் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது.