முதுகு ,இடுப்பு வலியை சீராக்கும் முருங்கை கீரை கஞ்சி !!!!!!!!!
இன்றைய கால கட்டத்தில் முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படாத நபர்களே இருக்க முடியாது.பெரும்பாலும் பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.அறுவை சிகிக்சைக்கு பிறகு L4,L5 என்னும் தண்டுவடம் பாதிக்க படுகிறது.முதுகு ,இடுப்பு வலியை சீராக்கும் முருங்கை கீரை கஞ்சி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- முருங்கை கீரை -3 கட்டு
- பச்சரிசி -1கிலோ
- ஏலக்காய்-சிறிதளவு
- மிளகு -சிறிதளவு
செய்முறை :
முருங்கை கீரையை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு அரைத்து இரண்டு லிட்டர் சாறு எடுத்து வைத்து கொள்ளவும் .அதனுடன் பச்சரிசி,ஏலக்காய்,மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும்.முருங்கை சாறுடன் அனைத்தும் நன்கு ஊறி வெயிலில் காய வேண்டும்.அதன் பிறகு அதை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளவும்.இதனை காலை ,மலை ஆகிய இரு வேலைகளிலும் நீரை கொதிக்க வைத்து இந்த அரிசியை போட்டு கஞ்சி வைத்து குடிக்க வேண்டும்