ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கை கீரை!
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கை கீரை.
நமது உடல் ஆரோக்யமாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு நமது உடலின் இரத்த ஓட்டமும் சீராகவும், ஆரோக்யமானதாகவும் இருக்க வேண்டும். தற்போது இந்த பதிவில், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- முருங்கை கீரை
- நெய்
- மிளகு
- சீரகம்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, ஒரு கைப்பிடி முருங்கை கீரையை போட்டு வதக்க வேண்டும். பின் அதனுள் மிளகு மற்றும் சீரகத்தை பொடித்து போட்டு, சில நிமிடங்களில் இறக்கி விட வேண்டும்.
இவ்வாறு செய்து தினமும் காலையில், சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதோடு, இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.