மெலிந்த தேகம் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் சற்று பருமனாவது குறித்து பார்க்கலாம். வெண்பூசணி, உலர் திராட்சை, வெல்லம் ஆகியவை உடல் எடையை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை. இவைகளை பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கும் முறைகளை காணலாம்.
இதற்கு தேவையான பொருட்களாக வெண்பூசணி, உலர் திராட்சை, வெல்லம் மற்றும் நெய் எடுத்துக்கொள்ள வேண்டும். வெண்பூசணியின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு சதை பகுதியை பசையாக்கி கொள்ளவும். உலர்ந்த திராட்சையை நீர்விட்டு ஊறவைத்து அதை அரைத்து வெண்பூசணி பசையுடன் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து அதை நீர்விட்டு பாகு பதத்தில் கொதிக்க வைக்கவும். இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் வெண்பூசணி, உலர் திராட்சை விழுதை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். இதனுடன் நெய் சேர்த்து நன்றாக கிளறினால் அல்வா பதத்தில் வரும். இதை காலை, மாலை வேளையில் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடுவதோடு ஒட்டிய முகமும் தெளிவு பெரும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட பூசணிக்காய் நல்ல மருந்தாகி பலன் தருகிறது. இதனுடைய சாற்றை தினமும் வெறும் வயிற்றில் குடித்துவ வந்தால் வயிற்று புண்கள் சரியாகும். மேலும், வெண்பூசணி உஷ்ணத்தை குறைக்கும் தன்மை கொண்டது. வெள்ளைப்போக்கு பிரச்னைக்கு சிறந்த மருந்தாகவும் இது விளங்குகிறது. வெண்பூசணி லேகியமானது, சித்த ஆயுர்வேத மருத்துவ கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி பயன்படுத்தலாம்.
வெண்பூசணி, உலர் திராட்சயை வைத்து உடல் எடையை அதிகரிக்கும் மருந்தை போல வேர்க்கடலை, எள் ஆகியவற்றை பயன்படுத்தியும் உடல் எடையை அதிகரிக்கும் மருந்தை தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்களாக வேர்க்கடலை, எள், அவல் மற்றும் நெய் எடுத்து கொள்ள வேண்டும்.
வேர்க்கடலையை வறுத்து தோலை நீக்கிவிட்டு பொடி செய்து எடுக்கவும். இதேபோல், எள்ளையும் பொடி செய்து கொள்ளவும். வெல்லத்துடன் வேர்கடலை பொடி, எள்ளுப்பொடி, சிவப்பு அரிசி அவல் பொடி சேர்த்து கலந்து அப்படியேவும் சாப்பிடலாம் இல்லை நெய்விட்டு உருண்டைகளாக பிடித்து லட்டு போன்றும் சாப்பிடலாம்.
இதை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். நிலக்கடலை, எள் ஆகியவற்றில் அதிக சத்துக்கள் உள்ளதால் இது நமது உடல் எடையை அதிகரிக்க செய்ய காரணாமாக அமையும்.
இதே போல மற்றும் ஒரு மருத்துவ குறிப்பாக அஸ்வகந்தா சூரணத்தை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் மருத்துவம் குறித்து தற்போது பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்களாக அஸ்வகந்தா சூரணம், நெய், உலர் திராட்சை, பால் மற்றும் பனங்கற்கண்டு.
ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய் விடவும். இதில் 5 முதல் 10 உலர்ந்த திராட்சைகளை போடவும். உலர் திராட்சை பொறிந்ததும் சிறிது அஸ்வகந்தா சூரணம் சேர்க்கவும். இதில் தேவையான அளவுக்கு நீர்விட்டு நன்றாக கொதிக்க விட வைக்கவும். அது நன்றாக கெட்டித்தன்மை அடையும் போது சுண்ட காய்ச்சிய பாலை அதனுடன் சேர்க்கவும்.
மேலும், அதோடு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். இதை அனைத்து வயதினர்களும் சாப்பிடலாம். இதை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கொடுத்து வந்தால் அவர்களுக்கு உடல் எடை கூடியதோடு ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…