அடடே… இவ்வளவு நாளா தெரியாம போச்சே….!! உடலை பக்குவமாக பாதுகாக்கும் பசலை கீரையின் பயன்கள்….!!!
வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள். அவை நீண்ட ஆயுளை பெறுவதற்கு உதவுகின்றன. உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர். பசலையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்களான அமினோ அமிலங்கள், வைட்டமின்கள். கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள் மேற்றும் பைபிளேவனாயிடுகள் உள்ளன. வைரசுக்கு எதிராக செயல்படும் கிளைக்கோ புரதம் ஒன்றும் காணப்படுகிறது.
கீரைகளில் தனித்தன்மை வாய்ந்தது பசலைக்கீரை. இது தரைப்பசலை, கொடிப்பசலை என இரண்டு வகைப்படும். பசலைக் கொடிகளில் சிவப்பு நிறுத்த தண்டுகளையும், சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த இலைகளையுடைய செடி பசலையே உணவுடன் கூட்டாக செய்து சாப்பிட பயன்படுத்தப்படுகிறது.
சத்துக்கள் :
இந்த கீரையில் தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதசத்து உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரசாத்தும் அதிக அளவில் உள்ளன. பசலைக்கீரையில் இரத்தத்தை விருத்தியாக்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது. இந்த கீரை எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டது.
இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் :
இரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகிறது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் ஹீமோகுளோபின் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இதன் இலை சாற்றுடன் சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்கு நீர்க்கோவை குணமாகும்.
நீரிழிவு :
பசலைக்கீரை நீரிழிவு, இரத்த குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றை கரைக்க உதவுகின்றது. கற்களைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்க்கு உள்ளது. சிறுநீரக கோளாறுகளையும் அகற்றுகிறது. இதன் சாற்றை கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.
இரத்த அழுத்தம் :
ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்சிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாகாடீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. இது இரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.