மாரடைப்பை தடுக்கும் சப்போட்டாவின் மகத்துவமான மருத்துவ குணங்கள்
- சப்போட்டா பழத்தில் உள்ள மருத்துவக் குணங்கள்.
இன்று நாம் அன்றாட வாழ்விலே பல வகையான பலன்களை பயன்படுத்துகிறோம். இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்றே கூறலாம். ஏனென்றால் இயற்கையாக விளையும் அனைத்து பல வகைகளும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் பல நன்மைகளை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது.
நமக்கு உடல் ரீதியாக ஏற்படுகிற அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நாம் தான். ஏனென்றால், நாம் நமது பாரம்பரிய உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளான பாஸ்ட் புட் உணவுகளை உண்ண தொடங்கியது தான் இதற்க்கு காரணம். இந்த உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்துக்கள் உடலில் பல விதமான நோய்களை ஏற்படுத்துகிறது.
தற்போது இந்த பதிவில், தித்திக்கும் சப்போட்டா பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். சப்போட்டாவில் பல வகையான சத்துக்கள் உள்ளது. இதில் அதிகமான வைட்டமின்களும், தாது பொருட்களும் உள்ளது.
மாரடைப்பு
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று மாரடைப்பு தான். இதற்கு முக்கிய காரணமே நம்முடைய உணவுகள் தான். தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த நாளங்களில் கொழுப்பு படிவத்தை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
இது இரத்த நாளங்களை சீர்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்களுக்கு சப்போட்டா ஒரு சிறந்த மருந்தாகும். மேலும், சப்போட்டா இதயம் சம்பந்தமான அனைத்து நோய்களில் இருந்தும், உடலை பாதுகாப்பதாக ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
தூக்கமின்மை
தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு சப்போட்டா ஒரு சிறந்த மருந்தாகும். இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுபவர்கள், படுக்கைக்கு செல்வதற்கு முன், சப்போட்டாக் கூழ் குடித்துவிட்டு சென்றால் ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
காசநோய்
காசநோய் பிரச்னை உள்ளவர்களுக்கு சப்போட்டா ஒரு சிறந்த மருந்தாகும். இப்பிரச்சனை உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, அதனுடன் ஒரு நேந்திரன் பலமும் உண்டு வந்தால், காசநோய் பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.
பித்தம்
பித்தப்பிரச்சனை உள்ளவர்களுக்கு சப்போட்டா ஒரு சிறந்த மருந்தாகும். சப்போட்டாவில் பித்தத்தை நீக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. சப்போட்டா பழத்தை சாப்பிட்டு, பின் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று சாப்பிட்டால் பித்தப் பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.
எலும்பு
சப்போட்டா பழத்தில் நமது எலும்புகளுக்கு உறுதி அளிக்கக் கூடிய கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே சப்போட்டா பலத்தை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நமது எலும்புகள் வலுப்பெறும். நமது உடல் ஆரோக்கியமும் மேம்படும்.