குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் பால் குடிக்க கொடுப்பது நிறைய நன்மைகளை தரும்.
இந்திய நாட்டில் அனைவரது வீட்டிலும் பால் குடிப்பது என்பது அத்தியாவசியமான ஒன்று. மேலும் அது ஒரு முழுமையான உணவாக குழந்தைகளுக்கு அதிகமாக கருதப்படுகிறது. அதைவிட பாலில் ஊட்டச்சத்து மிக அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் குடிக்கலாம் என்பதால் இது ஒரு எளிமையான பானமாகவும் உள்ளது. மேலும் பாலில் புரதம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பல நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
பலர் சூடான பால் குடிக்க விரும்புகிறார்கள். பலர் குளிர்ச்சியை விரும்புகிறார்கள். சிலர் சர்க்கரையுடன் குடிக்கிறார்கள். சிலர் சர்க்கரை இல்லாமல் குடிக்கிறார்கள். ஆனால் பாலை சூடாக குடித்தால் நன்மையா அல்லது குளிராக குடித்தால் நல்லதா காலையில் குடிப்பதா அல்லது மாலையில் குடிப்பதா என்று பல கேள்விகள் இருக்கும். அதனை இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பருவ மாற்றம்: பாலை நீங்கள் சூடாக குடித்தாலும் சரி குளிர்ச்சியாக குடித்தாலும் சரி அது நன்மை பயக்கும். ஆனால் பருவ காலத்திற்கு ஏற்ப குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். கோடைக்காலத்தில் குளிர்ச்சியான பால் குடிக்கலாம். குளிர் காலத்தில் சூடான பால் குடிக்கலாம்.
பால் குடிப்பதற்கான நேரம்: ஆயுர்வேதத்தின் படி, காலை எழுந்த நேரத்திலும், இரவு உறங்க செல்லும் நேரத்திற்கு முன்பும் பால் குடிப்பது சிறந்தது. ஒரு தினத்திற்கு இரண்டு கப் பால் குடிப்பது சிறந்தது. உடலில் கால்சியம் நிறைந்து இருக்கும்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…