தற்போது பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள். அதனால் குழந்தைப்பருவத்தை முழுதாக அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது. மேலும், அக்குழந்தைகளின் உடலும் மிகவும் சோர்ந்து வலுவிழந்து போய்விடுகிறது. சில குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின், இடுப்புவலி, மூட்டுவலி, கர்ப்பப்பை பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. இவை அனைத்தையும் சரி செய்ய இந்த லட்டு போதும்.
தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து – இரண்டு கப், பொட்டுக்கடலை – 1/2 கப், கருப்பட்டி – 1 கப், நல்லெண்ணெய் – 3/4 கப்.
செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை இரண்டு, மூன்று முறை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி விட்டு தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை நன்கு காய வைக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து உளுத்தம்பருப்பை நன்கு வறுத்து கொள்ளுங்கள். இதனுடன் பொட்டுக்கடலையையும் வறுத்து கொள்ளுங்கள். பின்னர் இவற்றை மிக்சியில் சேர்த்து இதனுடன் கருப்பட்டி சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள்.
பின்னர் அதே கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு சூடுபடுத்த வேண்டும். இந்த நல்லெண்ணெய் கை பொறுக்கும் சூடு வந்தவுடன் நிறுத்தி விடுங்கள். பின்னர் இந்த நல்லெணெய்யை சிறிது சிறிதாக அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்க வேண்டும். நல்லெணெய் முழுவதையும் கலந்த பிறகு நீங்கள் உங்கள் கையை பயன்படுத்தி லட்டுகளாக பிடித்து கொள்ள வேண்டும். இந்த லட்டுகளை மாதத்திற்கு 5 சாப்பிட்டாலே போதும். உங்களது மாதவிடாய் கோளாறு பிரச்சனை சரியாகிவிடும்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…