தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்!அதை தீர்க்கும் வழிமுறைகள்!
தூக்கம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.இரவில் நன்கு தூங்காமல் முழித்து கொண்டு இருந்தால் உடல் சோர்வு ,புத்தி மயக்கம் ,தெளிவின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இது மட்டுமில்லாமல் பயம்,மலச்சிக்கல்,மந்தம்,ஜீரண கோளாறு,போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இரவு நன்கு தூக்கமின்மையால் காலையில் எழுந்தவுடன் சோம்பலாக இருக்கும் இதனால் அன்று நாள் முழுவதும் அப்படியே ஓடிவிடும்.
நீங்கள் செய்ய விரும்பிய நிகழ்வுகளை செய்ய முடியாது.இரவு தூங்குவதற்கு கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராத நிலையே ஏற்படும்.இரவு நன்றாக உறங்குவதற்கு பின்வரும் உணவுகளை உண்டால் மட்டுமே போதுமானது.
அவை இரவு தூங்குவதற்கு முன் சப்போட்டா பழம்,வாழைப்பழம்,மிதமாக கொதிக்க வைத்த சூடான பால்,தேன்,பனங்கற்கண்டு போன்றவற்றை சாப்பிட்டால் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் இரவு நன்கு தூக்கம் வரும்.
மேலும் ஆவியில் வேகவைத்த உணவுகளான இடியாப்பம்,இட்லி போன்ற உணவுகளும் பாதாம் போன்ற உணவுகளும் சாப்பிடலாம் இவ்வாறு படுப்பதற்கு முன்பு சாப்பிட்டால் ரொம்ப நேரம் முழித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரவில் நல்ல தூக்கம் கிடைத்தால் மட்டுமே உடல் சோர்வு,மயக்கம் போன்ற விபரீத பிரச்சனைகள் ஏற்படாது.எனவே நன்கு தூங்கினால் மட்டுமே மறுநாள் எழுந்தவுடன் புத்துணர்ச்சியாக இருக்கமுடியும் என்று அறிஞர்கள் கூறுகின்றன.