கர்ப்பிணி பெண்களே….. உங்களுக்கு கர்ப்பகாலத்தில் இந்த நோய் மட்டும் வரக்கூடாது…..

Default Image
  • கர்ப்பகால சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்.
  • கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்.

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் தாயை மட்டுமல்லாமல், சேயையையும் தாக்க கூடியது.

Image result for கர்ப்பகால சர்க்கரை நோயால்

எனவே கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய் கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடாது.

கர்ப்பகால சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்

அதிக எடை உள்ள பெண்கள், முந்தைய கர்ப்பகாலத்தில் ஏற்கெனவே சர்க்கரை நோய் இருந்தாலோ, மனநல நோய் அல்லது ஸ்டீராய்ட் மருந்து உட்கொண்டிருந்தாலோ அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் பிரச்னை இருந்தாலோ இந்த நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

Related image

கற்பகாலங்களில் பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் போது பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அவற்றை பற்றி இப்பொது பார்ப்போம்.

குழந்தையின் எடை அதிகரிப்பு

கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டால், அது குழந்தை உருவாகும் போது கர்ப்பிணி பெண்களுக்கு தொப்புள் கொடியில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

Related image

மேலும், இந்த பிரச்சனையால், குழந்தை பிறக்கும்போது 4 கிலோவுக்கு மேல் அதிகமான எடையுடன் பிறக்க வாய்ப்புள்ளது.

இதய நோய் பிரச்னை

கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால், அது குழந்தைகளுக்கு இதய நோய் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Image result for குழந்தைகளுக்கு இதய நோய் பிரச்சனைகளை

மேலும், சில குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.குழந்தை பிறக்கும் போது நுரையீரல் சரியாக வளர்ச்சி அடையாமல் சுவாசக் கோளாறு ஏற்படக் கூடும். குழந்தை மஞ்சள் காமாலையுடன் பிறக்க வாய்ப்புள்ளது.

பரிசோதனை

பெண்கள் கர்ப்பம் அடைந்தவுடன் முதல் முறையாக பரிசோதனைக்கு வரும்போது இரண்டாம் வகை சர்க்கரை நோய் உள்ளதா? என்பதைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Image result for குழந்தைகளுக்கு இதய நோய் பிரச்சனைகளை

சர்க்கரை நோய் இல்லையென்றாலும் கர்ப்பம் அடைந்து 24 வாரங்களில் மீண்டும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

கர்ப்ப காலங்களில் சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை சாப்பிடுவது மிக சிறந்தது. மேலும், இதனால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

பழங்கள் காய்கறிகள்

கர்ப்ப கால சர்க்கரை நோய் இருந்தால் பழங்கள், காய்கறிகள், முழுமையான தானியங்கள், பருப்புகளை மருத்துவர் கூறிய அளவில்தான் சாப்பிட வேண்டும். “பாலீஷ்’ செய்யப்பட்ட தானியங்களைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Image result for பழங்கள் காய்கறிகள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள், நேரடியாக சர்க்கரையோ அல்லது சர்க்கரை சிரப் சேர்க்கக் கூடாது. ஆரோக்கிய கொழுப்பான எண்ணெய், சனோலா எண்ணெய் பயன்படுத்தலாம்.

உணவு

Image result for இட்லி, தோசை, மூன்று சப்பாத்தி, கோதுமை பிரட் உப்புமா

இட்லி, தோசை, சப்பாத்தி, கோதுமை பிரட்,  உப்புமா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினை காய்கறி கலந்து உண்ண வேண்டும். இதனுடன், தக்காளி, கொத்தமல்லி, கத்தரிக்காய் சட்னிகள், பாசிப்பருப்பு சாம்பார் போன்றவற்றில் ஒன்றினை எடுத்துக்கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது மிக நல்லது.

பல வகைகளான மா, பலா, வாழை, சப்போட்டாவை தவிர்க்க வேண்டும். மேலும், உருளைக்கிழங்கு, சேணைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீட்ரூட்டை கிழங்கு வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Related image

பழச்சாறு, சர்க்கரையை உடனடியாக அதிகரிப்பதால் அதனை தவிர்க்க வேண்டும். மேலும், கருப்பட்டி, வெல்லம், சீனி, வனஸ்பதி, ஐஸ்கிரீம், பேரிச்சம் பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், குளிர்பானங்கள், தேன் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்