கர்ப்பமாக இருக்கும் பெண்களின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தான், வயிற்றில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் சீரான முறையில் பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது ஆகும்.
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் பிரசவம் என்பது இயற்கையான முறையில் தான் நடந்தது. ஆனால் இன்று பெரும்பாலானோருக்கு அறுவை சிகிச்சை முறையில் தான் நடைபெறுகிறது. இதற்கு நமது கற்ப காலங்களில் நம்முடைய நடைமுறைகள் ஒரு காரணமாக இருக்கிறது.
நமது முன்னோர்களின் காலத்தில் இன்று காணப்படக் கூடிய சொகுசு வாழ்க்கை இருக்கவில்லை. காலை முதல் இரவு உறக்கத்திற்கு செல்லும் வரை, கடினமான கஷ்டத்தோடு வேலை செய்வதுண்டு. ஆனால் இன்று, சமைப்பது, துணி துவைப்பது என அனைத்துமே எந்திரமயமாக்கப்பட்டு விட்டது. நமது உடலுக்கு வேலை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அதேபோல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டியதும் மிகவும் அவசியம்.
தற்போது இந்த பதிவில் கர்ப்பிணி பெண்கள் பாயில் படுத்து உறங்குவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம்.
கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு
பாயில் படுத்து உறங்குவது உடலுக்கு குளிர்ச்சியானது. எனவே கர்ப்பிணி பெண்களின் உடல் எப்போதும் அதிகமான சூடாக இருப்பது நல்லதல்ல. எனவே, உடல் வெப்பம் அதிகமாக உள்ள கர்ப்பிணி பெண்கள், பாயில் படுத்து உறங்கினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
அதேபோல் பாயில் படுத்து உறங்குவதால் கர்ப்பிணி பெண்களின் இடுப்பெலும்பு விரிவடையும். இதனால், சுக பிரசவம் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மேலும், கர்ப்பிணி பெண்கள் பாயில் படுப்பதால் முதுகுவலி, இடுப்புவலி, தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகள் வராது. அதே போல் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்லாது, பிறந்த குழந்தைகளையும் பாயில் படுக்க வைப்பது நல்லது.
பிறந்த குழந்தைகளை பாயில் படுக்க வைப்பதால், குழந்தைகளின் முதுகெலும்பு சீராவதுடன், கழுத்து சுளுக்கு பிடிக்காது. இப்படி குழந்தைகளை பாயில் படுக்க வைப்பதால், அவர்கள் வேகமாக வளர்வதுடன், குழந்தைகளின் உடலில் உள்ள சூட்டை தணிக்கவும் உதவுகிறது. எனவே, இந்த நடைமுறையை கடைபிடிப்பது தாய், சேய் இருவரின் நல்லது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…