கண்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பொன்னாங்கண்ணி கீரை….!!!

Default Image

நமது அருகாமையில் சந்தைகளில் அனைத்து வகையான கீரைகளும் விலை மலிவாக கிடைக்கும். கீரைகளில் அனைத்து வகையான சத்துக்களையும் கொண்டுள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.இப்போது பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

பொன்னாங்கண்ணி கீரையின் வகைகள் :

Image result for ponnanganni keerai

 

அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது பொன்னாங்கண்ணி. இது பொன்னான சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளதால் பொன்னாங்கண்ணி என்ற பெயர் இதற்கு வந்தது. இதில், நாட்டு பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி, சிவப்பு பொன்னாங்கண்ணி என பலவகை உண்டு. நாட்டு பொன்னாங்கண்ணி சிறந்த சுவை உள்ளதால் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வகை பொன்னாங்கண்ணியும் நன்மை தரக்கூடியதுதான்.

நோய்களை குணப்படுத்த கூடியது :

உடலுக்கு பொலிவு தரும் பொன்னாங்கண்ணி குளிர்ச்சி தன்மை உடையது. ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. ஈரல் நோய்களை குணப்படுத்துகிறது. பித்த சமனியாக விளங்கும் பொன்னாங்கண்ணி கீரை கண்களுக்கு நன்மை தருகிறது. பார்வையை கூர்மையாக்குகிறது. தலைமுடி கருமையாக, அடர்த்தியாக வளர உதவுகிறது.

கண்ணுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி :

Image result for கண்ணுக்கு பலம்

 

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பொன்னாங்கண்ணி வயிற்று புண்களை ஆற்றும். நோய் எதிர்ப்பு சக்தி உடைய இது, நச்சுக்களை வெளியேற்றுகிறது. நார்ச்சத்தை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.பொன்னாங்கண்ணி கீரையை பயன்படுத்தி கண்களுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம்.

செய்முறை :

பொன்னாங்கண்ணி கீரையை சுத்தப்படுத்தி தண்டுகள், காம்புகள் இல்லாமல் எடுக்க வேண்டும். நீர்விட்டு உப்பில்லாமல் வேக வைக்க வேண்டும். இளம் கீரையாக எடுத்துக்கொள்வது நல்லது. கீரையை நன்றாக வேக வைத்தபின், இதனுடன் அரை ஸ்பூன் வெண்ணெய் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கலந்து, 48 நாட்கள் வரை சாப்பிட்டுவர பார்வை கூர்மைபெறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்