சரும நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தகரைச் செடி….!!!
சரும நோய்கள பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மருத்துவரை தேடி செல்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு அதிகமாக தீர்வு கிடைப்பதற்கு பதிலாக, பக்க விளைவுகள் தான் பலனாக கிடைக்கிறது. நாம் சரும பிரச்சனைகளுக்கு சேர்க்கை முறையில் தேர்வு காண்பதை விட இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகச் சிறந்தது.
உடல் குளிர்ச்சி :
தகரை செடி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மேலும் இந்த உடலில் உள்ள சரும வியாதிகளை விரட்டும் தன்மை கொண்டது. இது மலச்சிக்கலை போக்கக் கூடிய தன்மை கொண்டது. இந்த செடியில் காய்களை உள்ளது. தகரைச் செடியின் காய்களும் மருத்துவ குணம் கொண்டது. இவற்றின் இலைகள், விதைகள் மற்றும் வேர்கள் அனைத்தும் உடலுக்கு பல ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவ குணங்களை கொண்டது.
தேமல் :
இன்று பலர் கால சூழ்நிலைகள் மாற்றம் ஏற்படும் போது பல நோய்கள் ஏற்படுகிறது. அதில் முக்கியமான நோய் தான் இந்த தேமல். தகரை விதைகளை, மோரை விட்டு அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின் அதனை சிரங்கின் மேல் தடவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது சிரங்குகள் மற்றும் நெடுநாள் காயங்கள் ஆறிவிடும். மேலும் இந்த விழுது, படை, தேமல் போன்ற சரும பாதிப்புக்களை குணமாக்கும்.
சொறி மற்றும் சிரங்கு :
தகரை செடியை கொண்டு காய்ச்சிய முலிகை நீரை, சிரங்கு மற்றும் சொறி போன்ற சரும பாதிப்புகளின் மீது மெதுவாக ஊற்றி, நன்கு அந்தக் காயங்களை அலசிவிட்டு, அதன்பின், தகரை இலைகளை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, சிரங்கின் மேல் தடவி வர, வேதனை கொடுத்துவந்த, சிரங்குகள் மற்றும் சொறி போன்ற சரும பாதிப்புகள் எல்லாம் விலகி பூரண சுகம் பெறலாம்.
குடல் சுத்தம் :
இன்றைய நாகரீகமான உலகில் நாம் உண்டு வரும் பாஸ்ட் புட் உணவுகளால் நமது உடலின் உள்ளுறுப்புகள் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதில் முக்கியமாக பாதிக்கப்படுவது குடல் தான். இந்த குடலை தூய்மையாக்க தகரை இலைகளை வதக்கி, பொரியல் போல, சாதத்தில் சேர்த்து உண்டு வந்தால், குடல் சுத்தமாகி, மலம் வெளியேறி, உடல் நலமாகும். தகரை இலைச்சாற்றுடன் விளக்கெண்ணெய் சேர்த்து, தைலம் போல காய்ச்சி, உடலில் ஏற்பட்ட புண்கள் மீது தடவி வர, புண்கள் விரைவில் ஆறிவிடும்.