தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நோ என்ட்ரி ! உலகளாவிய கொரோனா பாதிப்பில் இந்தியா மிகவும் மோசமான சூழலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது, இந்நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள், பயனிகள், உள்ளிட்டவைகளுக்கு அந்நாடுகளுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மாலத்தீவிற்குள்ளும் வர இந்திய உள்ளிட்ட பிற தெற்காசிய நாடுகளுக்கும் மாலத்தீவு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது, எனவே, இந்த தடையானது ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இருந்து […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைராசால் 30,355 பேர் புதிதாக பாதிப்படைந்துள்ளனர் 293 உயிரிழப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,355 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,68,864 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்றைய பாதிப்பு 7564 ஆக பதிவாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனாவால் இன்று 293 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,471 ஆக […]
அசாம் புதிய கோவிட்-19 வழிகாட்டுதல்கள் வெளியீடு கடைகள் பதியம் 1 மணி வரை திறந்திருக்க உத்தரவு. இந்தியாவில் கொரோனாவின் 2 வது பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, இதன்விளைவாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்து வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் முழுஊரடங்கு மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றனர், அந்த வரிசையில் அசாம் மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு ஊரடங்கை விதித்ததுடன் புதிய கொரோனா நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது. […]
டெல்லியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வந்ததால் லாக் டவுன் அறிவித்தால்,கோவிட் தொற்றுகள் சற்று குறைந்து வருவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் , இந்த லாக் டவுன் மக்களால் வெற்றிகரமாக அமைந்தது என்றும் இந்த நாட்களில் ஆக்சிஜன் படுக்கையை அதிகரிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் நேற்று ஜிடிபி மருத்துவமனைக்கு அருகில் 500 புதிய ஐசியு படுக்கைகளைத் தொடங்கியிருப்பதாகவும், இப்போது டெல்லியில் ஐ.சி.யூ மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 29,272 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 14,38,509 ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 7,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 298 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,178 ஆக அதிகரித்துள்ளது, மேலும் கொரோனாவால் இன்று 19,182 பேர் […]
ஜம்மு & காஷ்மீரில் பாமர மக்கள் பயனடையும் விதத்தில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா அதிரடி அறிவிப்பு! இந்தியாவில் கொரோனா தொற்றால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கள் அன்பிற்குரிய உறவினர்களை இழந்து துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர், இதனையடுத்து துரதிர்ஷ்டவசமாக கொரோனாவால் தங்கள் உறவினர்களை இழந்தவர்களுக்கு உதவ ஜம்மு & காஷ்மீர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினரை கொரோனா தொற்றால் இழந்த மூத்த குடிமக்களுக்கு ஆயுள் சிறப்பு ஓய்வூதியம் […]
இத்தாலிய பெண் ஒருவர் ஆறு டோஸ் ஃபைசர் கோவிட் தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளார். கொரோனாவிற்கு பிறகு உலகில் நடந்துகொண்டிருக்கும் தொடர்ச்சியான பல நிகழ்வுகளில் கேள்வி படாத ஒரு கதை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையால் உலகமே பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது தடுப்பூசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், தடுப்பூசியை பொறுத்தவரை சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளது. இரண்டு டோஸ் போதுமானதா அதில் வெவ்வேறு நிறுவனங்கள் கலக்கப்படலாமா அல்லது ஒரு டோஸ் எவ்வளவு […]
தொற்றுநோயின் இரண்டாவது அலை புதிய சவால்களைக் கொண்டுவந்துள்ளது யோகி ஆதித்யநாத்- பிரதமர் மோடிக்க நன்றி லக்னோ மாநிலத்தில் 300 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க தனது அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை (மே 10) தெரிவித்தார் மேலும் கோவிட்-19 தொற்றுநோயின் 2-வது அலையைச் சமாளிக்க ரயில்வே மற்றும் விமானப்படை உதவியுடன் மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் சப்ளை செய்ய முடிந்தது என்றும் இதற்காக மோடி அரசுக்கு நன்றி எனவும் அவர் கூறினார். இதன்மூலம் நாங்கள் […]
கொரோனாவின் சுனாமி தாக்குதலில் சிக்கித்தவிக்கும் டெல்லி மக்கள் ஒரே நாளில் 300 க்கும் மேற்பட்டோர் பலி. இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் கொரோனா அதன் தாக்கத்தை சற்று கூட குறைக்காமல் கோர தாண்டவம் நிகழ்த்தி வருகிறது, இதனால் பல்வேறு மக்கள் தங்கள் உறவினர்களை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனையடுத்து டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 12,651 ஆக பதிவாகி பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் […]
உத்ரகாண்ட்டில் கும்பமேளாவால் தொற்று 1800% ஆக அதிகரிப்பு ,2020 ஆம் ஆண்டை விட அதிகரித்த இறப்பு. உத்தரகாண்ட் மாநிலத்தில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 24 வரை ஹரித்வாரில் மகா கும்பமேளா நடைபெற்றதால் கொரோனா தொற்று 1800% ஆக அதிகரித்துள்ளது. உத்ரகாண்ட்டில் ஒரு மாதத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்துள்ளதால், அந்த மாநிலத்தில் இந்த கும்பமேளா நிகழ்வு ஒரு சூப்பர் ஸ்ப்ரெடர் நிகழ்வாக மாறியுள்ளது. ஹரித்வாரில் ஏப்ரல் 12ஆம் தேதி 35 லட்சத்திற்கும் […]
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெரும் கொரோனா நோயாளிகளின் செலவை அரசே ஏற்கும் என மத்தியபிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌவ்ஹான் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர், அதில் முதன்மையாக அவர்களின் வாழ்வாதாரம் மோசமான நிலையில் உள்ளது, இதனால் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர், இந்த சூழலில் மக்களுக்கு உதவும் பொருட்டு மத்திய பிரதேச அரசு ஓரு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மத்தியபிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் […]
காரில் வேலைக்காக வைத்திருந்த கையுறை பெட்டியிலிருந்து சாப்பிட்டிருக்க வேண்டும் – நாய் உரிமையாளர் விளக்கம்! லண்டனில் டாரென் கொய்ன் என்பவர் ராம்போ என்ற ரோட்வெய்லர் நாய்யை வளர்த்து வந்துள்ளார். ராம்போவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளது. இதை அறிந்த நாய் உரிமையாளர் ராம்போவை உடனே கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கெய்த் லியோனார்ட் என்ற மருத்துவர் என்டோஸ்கோபி மூலம் நாயின் வயிற்றை பரிசோதித்து பார்த்துள்ளார். அதில் வளர்ப்பு நாயானது அதிக கையுறைகளை சாப்பிட்டிருப்பது […]
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை சிறைக்கைதி ஒருவர் தானாக முன்வந்து அடக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்…. இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை நாட்டில் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது, இந்நிலையில் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இன்று மட்டும் 3,915 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷ்யாம் பாபா என்பவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றம் ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவர் […]
இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 25 சதவீதம் இந்த 10 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது என சுகாதாரத்துறை வெளியீடு.இதில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது,மேலும் வைரஸ் தொற்று எண்ணிக்கையை குறைக்க நாடுமுழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே தொற்று அதிகம் உள்ள 10 மாவட்டங்களின் பட்டியலை […]
அச்சத்தில் டெல்லி மக்கள்,புதிய உச்சத்தை தொட்டுள்ள புதிய பாதிப்பு எண்ணிக்கை… இந்தியாவில் கொரேனா 2 வது அலை காட்டுத்தீ போல் மக்களிடையே பரவி மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் இந்திய தலைநகரமான டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,832 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு 341 பேர் எனவும் டெல்லி அரசு தெறிவித்துள்ளது. மேலும் 79,593 கொரோனா பரிசோதனை எடுத்துள்ளதாகவும் அதில் 65,663 ஆர்,டி-பிசிஆர்/சிபிஎன்ஏஏடி/என்ஏடி போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ளது, இச்சூழலில் இறப்பு […]
நீங்கள் தூங்கினால் மட்டும் போதும் உங்களது சம்பளம் டாலரில் வழங்கப்படும் . குட்டித் தூக்கம் போட விரும்புபவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு தூங்கினால் 1500 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என்று EachNight.com ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது,இவர்கள் மெத்தைகள், படுக்கை மற்றும் பிற பொருட்களின் நன்மை தீமைகள் அவற்றின் அனுபவங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் நாள் முழுவதும் வேலை பார்த்து சோர்வாக இருப்பதை தவிர்க்கவும் சிறு தூக்கம் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை அறிய இந்த சோதனை […]
தேவையற்ற அடிவயிற்று கொழுப்பை குறைக்க எளிய ஆரோக்யமான வழி. உடல் எடையைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சி இருக்கும் நிலையில், சில சத்தான உணவுகள் மூலம் உடல் பருமன் அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம், அந்த வகையில் பசுவின் பாலில் இருந்து வீட்டில் தயாரிக்கப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள தூய்மையான நெய் அல்லது ‘தேசி’நெய் உடல் பருமனை குறைக்க உதவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இது ஒரு சிறந்த மூலப்பொருள் என்றாலும், நெய் உடல் எடை, மற்றும் தேவையற்ற தொப்பை […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையை எளிதில் அடைய உதவும் வகையில் புதிய ஏற்பாடு…. டெல்லியில் கொரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அவர்களால் டி.ஒய்.சி.யே அறக்கட்டளையுடன் இணைந்து ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்துள்ளார், இந்த மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோக்கள் 85 முதல் 90 வரை ஆக்ஸிஜன் அளவைக் கொண்ட நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவமனைகளை அடைய உதவும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது, தற்போது 10 மாற்றியமைக்கப்பட்ட மூன்றுசக்கர வண்டிகள் மட்டுமே டெல்லியில் செயல்பாட்டுக்கு […]
ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியாவில் உள்ள ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் சிங்கங்களுக்கு ஊசி மூலம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மூக்கு, தொண்டை மற்றும் சுவாசக் குழாயிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மூலம் சோதனை செய்ததில் தொற்றானது வெளியிலிருந்து பரவியிருக்காது என்று கூறப்பட்டுள்ளது. விலங்குகள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக கூறப்படுகிறது. […]
முகமூடிகளின் குப்பை கழிவுகளில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான இரசாயனம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வாசிங்டனில் உள்ள ஸ்வெனசா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன்மூலம் உபயோகித்து அப்புறப்படுத்தப்பட்ட முகக்கவசம் நீரில் மூழ்கி வெளிவரும்போது அதில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஆய்வறிக்கையின்படி பொதுவான உபயோகப்படுத்திய முககவசத்தில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய சிலிக்கான் அடிப்படையிலான பிளாஸ்டிக், ஈயம், ஆண்டிமனி மற்றும் தாமிரம் உள்ளிட்ட அதிக அளவு மாசுபடுத்திகளை ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. மேலும் புதுமையான பொருட்கள், செயலாக்கம் […]