Weight Gain-இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஒரு சிலருக்கு என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை அப்படியே இருக்கும். இது வாத வகை உடல் கொண்டவர்களுக்கு தான் இதுபோல் இருக்கும். வாத உடல் என்றால் பஞ்சபூதங்களில் காற்று தேகம் என கூறப்படுகிறது.
இவர்களுக்கு ஆஸ்துமா ,வீசிங் பிரச்சனை, அலர்ஜி மலர்ச்சிக்கல் ,போன்ற பிரச்சனைகள் பொதுவாகவே இருக்கும். மேலும் குடல் சுத்தம் இல்லாமல் இருப்பது, தேவையான சத்துக்களை உங்களது குடல் உறிஞ்சாமல் இருப்பது, குடல் புழுக்கள் அதிகமாக இருப்பது போன்ற காரணத்தாலும் உடல் எடை அதிகரிக்காது. முதலில் இதனை சரி செய்து கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி செய்தால் உடல் எடை உறையும் என ஒல்லியாக இருப்பவர்கள் பெரும்பாலும் இந்த உடற்பயிற்சியை செய்வதில்லை. ஆனால் அப்படி இல்லை. உடற்பயிற்சி செய்யும் போது தசைகளில் உள்ள செல்கள் அதிகமாகும். இதன் மூலம் தசைகள் வளர்ச்சி ஏற்படும் .குறிப்பாக எடை தூக்குவது போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது.
காலையில் வெறும் வயிற்றில் உங்களால் முடிந்த அளவு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இதன் மூலம் இரைப்பை விரிவடைய செய்யலாம். இரைப்பை பெரிதாகும் போது உணவு அதிகமாக எடுத்துக் கொள்ளும் உணர்வு ஏற்படும். பிறகுதான் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
உடல் எடை அதிகரிக்க கார்போஹைட்ரேட் ,நல்ல கொழுப்பு சத்து ,நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக ப்ரோ பயாடிக் உணவுகளான பழைய சாதம், ஊறுகாய் ,தயிர், மோர் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகளில் பருப்பு வகைகள், பயறு வகைகள் எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக இரண்டு உணவு இடைவேளைகளில் சுண்டல் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் ஸ்டார்ச் அதிகம் உள்ள சர்க்கரை வள்ளி கிழங்கு உருளைக்கிழங்கு போன்றவற்றையும் இடைவேளையில் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை உணவோடு சேர்த்து எடுத்துக் கொள்வதை விட இரு உணவு இடைவேளையில் எடுத்துக் கொள்வதால் உடல் எடை வெகுவாக அதிகரிக்கும்.
எப்போதும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவை விட கொஞ்சம் அதிகமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். சாதம் இட்லி தோசை போன்றவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பாதாம் ,வேர்க்கடலை பிஸ்தா,தேங்காய் ,தேங்காய் பால் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு நல்ல கொழுப்புகளும் அதிகரித்து உடல் எடை கூடும்.
இறைச்சிகளில் அதிக அளவு புரதம் இருக்கும். அதேபோல் பயிறு மற்றும் பருப்பு வகைகளிலும் புரதச்சத்து அதிகம் இருக்கும் இவற்றை நீங்கள் தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்து உங்கள் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. குறிப்பாக உடல் எடை அதிகரிக்க வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்தது.
ஒரு சிலருக்கு மன அழுத்தத்தால் உடல் எடை குறைந்திருக்கும் .அவர்கள் பாலில் அஸ்வகந்தா பொடியை ஒரு பின்ச் அளவு கலந்து இரவு தூங்குவதற்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுத்து ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழத்தை தேனில் இரவே ஊற வைத்து விட வேண்டும்.காலையில் வெள்ளை எள்ளு மூன்று ஸ்பூன் வீதம் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். இப்போது இந்த எள்ளையும் , பேரிச்சம் பழத்தையும் மிக்ஸியில் அரைத்து குடிக்க வேண்டும்.ஒரு நாள் விட்டு ஒருநாள் இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்கள் குடிக்க வேண்டும்.
துரித உணவுகள் ,கேக், பப்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் உடல் எடை அதிகரிக்கும் .ஆனால் இவை உடலுக்கு ஆரோக்கியம் இல்லை. பிற்காலத்தில் பல பின் விளைவுகளையும் ஏற்படுத்தும்.
ஆகவே மேலே கூறிய வழிமுறைகளை பின்பற்றி உணவு முறைகளையும் பின்பற்றினால் மூன்று மாதங்களில் உங்கள் உடல் எடை அதிகரிக்கும்.
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…