உடல் எடையை குறைத்து சிலிம்மாக மாற வேண்டுமா !அப்ப இந்த ஜூஸை குடிங்க !
இன்றைய தலைமுறையினர் பெரிதும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடற்பருமன்.இந்நிலையில் உடல் எடை அதிகரிப்பதற்கு சில காரணங்கள் உள்ளது. அதிகமாக பாஸ்ட் புட் உணவுகளை எடுத்து கொள்வது, முறையற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமை, அதிக படியான கொழுப்பு உணவுகளை உட்கொள்ளுதல் முதலிய காரணங்களும் உடல் எடையை அதிகரித்து பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இந்த பதிப்பில் நாம் உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸை எவ்வாறு செய்வது என்பதை படித்தறியலாம்.
தேவையானவை :
உருளைக்கிழங்கு – 1
எலுமிச்சை சாறு – தேவைக்கேற்ப
தேன் -1 ஸ்பூன்
செய்முறை :
உருளைக்கிழங்கை நன்றாக கழுவி ஜூஸரில் போட்டு சாறு எடுத்து கொள்ள வேண்டும்.பின்பு அதனுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.இதனை தொடர்ந்து குடித்து வந்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.உருளைக்கிழங்கு நமது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கிறது.
உருளைக்கிழங்கில் நமது உடலில் புற்று நோய் மற்றும் இதய நோய் வராமல் தடுக்க பயன்படுகிறது.
குறிப்பு :
உருளைக்கிழங்கு ஜூஸ் குடித்த அரை மணி நேரத்திற்கு பிறகு தான் உணவு உட்கொள்ள வேண்டும். ஜூஸை அடித்த உடனே குடித்து விடுவது நல்லது.பிரிட்ஜில் வைத்து குடிக்க கூடாது.
உடற்பயிற்சி :
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து விட்டு இந்த ஜூஸை குடித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.