கவுன்சிலிங் போனா பைத்தியமா? மனநல நிபுணர் என்ன சொல்கிறார்?
சென்னை : நம்முள் பலருக்கும் பல வகையான கஷ்டங்கள், கவலைகள் இருக்கும். வேளைகளில் டென்ஷன், காதல் மாற்றும் திருமண உறவிலும் கூட சண்டை வருவது இயல்பு. இதனால், நாம் அதனை ஏற்று கொண்டு காலத்தை கடந்து செல்ல வேண்டும். நம்முள் இருக்கும் கஷ்ட, நஷ்டங்களை நண்பர்களிடம் பேசி கொள்வது நல்லது.
நமக்குள்ளே போட்டு அமுக்கி விட கூடாது, அப்படி செய்தால் மன அழுத்தம் (Psychological Stress) உடல் ரீதியான அழுத்தம் ஏற்படுகின்றனர். மன அழுத்தம் என்பது நம் வாழ்வில் இடையூறுகளின் காரணமாக மன ரிதியாக பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
இதற்குக் காரணம் வேலை பளு, பொருளாதார சிக்கல்கள், குடும்பப் பிரச்சினைகள், மற்றும் பிற பலதுவும் இருக்கலாம். மன அழுத்தம் நீண்ட காலமாக நீடித்தால் உடல் நலத்தை பாதிக்கும் அபாயமும் உண்டு.
பலர், அதனை புரிந்து கொள்ளாமல் யாரிடமும் ஷேர் செய்வது இல்லை. அதற்கு என்ன வழி என்றால், மனநல மருத்துவரிடம் சென்று நமக்கு இருக்கின்ற பிரச்சனையை எடுத்து கூறினால், அவர் நமக்கு ஆலோசனை வழங்குவார்.
ஆனால், நாம் மனநல மருத்துவரிடம் சென்றால், தம்மை மன நோயாளி என்றும், பைத்தியம் என்று எண்ணிக்கொள்வார்கள் என்று பலர் அலோசனை மறுத்து வருகிறார்கள். இது குறித்து மனநல மருத்துவர் மீனா கண்ணன் பேசுகையில், டிகிரி முடித்து கொண்டு ஒரு சாதாரண விஷயம் இதை கூட புரிவதில்லை.
நமக்கு ஒரு பிரச்சனை இருக்குதுனு தெரிஞ்சு தான் நாம் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க முயல்கிறோம். ஆனால், பைத்தியமாக இருந்தால் அவருக்கு அது என்னவென்றே தெரியாது. இதெல்லாம் நமக்கு தெரிந்து கொள்ள முடியும் என்பதால் தான், எனக்கு பிரச்சனை இருக்கிறது என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்க உள்ளீர்கள். அப்புறம் நீங்க எப்படி பைத்தியமாக இருக்க முடியும் என்று கூறிஉள்ளார்.
ஒரு நபர் நினைக்கும், உணரும் மற்றும் நடந்துகொள்ளும் விதத்தைப் பற்றி மேலும் சொல்ல, மனநல மருத்துவரால் மட்டுமே முடியும். மனநல மருத்துவர்கள் மருத்துவம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டிலும் பயிற்சி பெற்றுள்ளனர், அதே சமயம் உளவியலாளர்கள் மனநலத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
மனநல மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது ஒருவரை பைத்தியம் என்று சொல்லிட முடியாது. உண்மையில், இது மன நலனை நோக்கிய ஒரு பொறுப்பான செயலூக்கமான அர்த்தமாகும். மன அழுத்தம், பதட்டம், உறவுச் சிக்கல்கள் மற்றும் வாழ்க்கை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க ஆலோசனை அவர்கள் உதவுகிறார்கள்.
தனியாகப் போராடுவதை விட, உங்களுக்கு எப்போது ஆதரவு தேவை என்பதை உணர்ந்து அதற்கு உதவியாக மருத்துவர்கள் அளிக்கின்ற ஆலோசனை உதவியாக இருக்கும். மன ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் முக்கியமான அம்சமாகும்,
மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:
உடற்பயிற்சி:
தினசரி உடற்பயிற்சி மன அமைதியை அதிகரிக்க உதவுகிறது. இயற்கை நடைபயிற்சி, யோகா, அல்லது விளையாட்டுகள் இதற்குப் பொருத்தமானவை.
தியானம் மற்றும் யோகா:
தினசரி தியானம் மற்றும் யோகா செய்து வந்தால் மன அமைதியை மேம்படுத்த உதவும்.
சீரான தூக்கவழக்கம்:
போதிய தூக்கம் மன அழுத்தத்தை குறைக்க மிக முக்கிய பங்கு வகுக்கிறது. தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்.
உணவு கட்டுப்பாடு:
சீரான உணவுகள் மற்றும் பேலன்ஸான டயட் மனநலத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக பசுமை காய்கறிகள், பழங்கள், புரத உணவுகள் ஆகியவற்றை உட்கொள்வது முக்கியம்.
நெருங்கியவர்களுடன் பேசுவது:
மனதில் உள்ளதை நம்பிக்கைக்குரிய நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளுதல் மன அழுத்தத்தை குறைக்கும்.
பிடித்ததை செய்தல் :
உங்கள் விருப்பமான நாவல்கள் வாசிப்பு, இசை கேட்பது, ஓவியம் வரைவது போன்ற செயல்களில் ஈடுபடுதல் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
தன்னம்பிக்கை :
நமக்கு கிடைத்துள்ள பல நல்ல விஷயங்களை நினைவு கூர்வதும், நம் திறமைகளைப் பற்றி நம்பிக்கை கொள்ளவதும் மன அமைதிக்கு உதவும்.
சிகிச்சை &ஆலோசனை:
சில சமயங்களில் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
குறிப்பு : மன அழுத்தத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, மன அமைதியைப் பெற, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றலாம்.