இந்த கீரை யானைக்கால் நோயை குணப்படுத்துமா….?
- வல்லமை மிக்க வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்.
- யானைக்கால் நோயை குணப்படுத்தும் வல்லாரை கீரை.
நமது அன்றாட வாழ்வில் நமது உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது கீரை வகைகள் தான்.கீரைகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல் பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.
வல்லாரை கீரை
கீரை வகைகளில் பல வகையான கீரைகள் உள்ளது. அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, வல்லாரைகீரை, அகத்திகீரை என பல வகையான கீரைகள் உள்ளது. தற்போது நாம் வல்லாரை கீரையின் பயன்கள் பற்றி பார்ப்போம்.
இந்த கீரையில் இரும்புசத்து, சுண்ணாம்புச்சத்து, தாதுஉப்புகள் என ஏராளமான சத்துக்கள் உள்ளது.
மூளை செயல்பாடு
வல்லாரை கீரையை நமது உணவில் அனுதினமும் சேர்த்துக் கொள்ளும் போது இது மூளைக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் அளிக்கிறது. இந்த கீரையை படிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கும் போது, நினைவாற்றலை தூண்டி அறிவாற்றலை அதிகரிக்க செய்கிறது.
நரம்பு பாதிப்பு
நரம்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை ஒரு சிறந்த மருந்தாகும். வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்பு பாதிக்கும் நோய் உள்ளவர்கள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விடுதலை பெறலாம்.
மேலும் மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள பாதிப்புகளை நீக்குவதற்கு இது ஒரு சிறந்த கீரையாகும்.
இளம் நரை
இன்றைய காலகட்டத்தில் நாகரீகம் என்கிற பெயரில் நாம் விதவிதமான ஷாம்புக்களை பயன்படுத்துவதால், மிக குறைந்த வயதிலேயே பலருக்கு இளநரை வந்து விடுகிறது.
இளம்நரை உள்ளவர்கள், வல்லாரை கீரை விழுதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.
பல் பிரச்சனைகள்
பற்களில் பிரச்னை உள்ளவர்களுக்கு வல்லாரை கீரை ஒரு சிறந்த மருந்தாகும். வல்லாரை பொடியை கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகள் நீங்கி பல் ஈறுகள் பலப்படும்.
கண் பிரச்சனைகள்
கண் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கீரை ஒரு மிக சிறந்த மருந்தாகும். கண்ணில் பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் விரைவில் கண்ணில் உள்ள பிரச்சனைகள் நீங்கி பார்வைதிறன் அதிகரிக்கும்.
யானைக்கால்
யானைக்கால் நோய் உள்ளவர்கள் தொடர்ந்து இந்த கீரையை காலில் வைத்து கட்டி வந்தால், யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். மேலும் இது தசை சிதைவு, வீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது.