கடுகு சிறுத்தாலும், காரம் சிறுக்காதுனு சும்மாவா சொன்னாங்க, கடுகு எண்ணெயில் உள்ள முக்கியமான மருத்துவ குணங்கள்
- கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள்.
நமது அன்றாட வாழ்வில் நமது சமையல்களில் பல வகையான எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். ஆனால், அனைத்து எண்ணெய்களுமே நமது உடல் ஆரோக்கியம் தரக்கூடியதாக இருப்பதில்லை.
நாம் உண்பதற்காக எந்த பொருளை பயன்படுத்தினாலும், அது இயற்கையான பொருட்களாக இருந்தால் தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். அப்படியில்லையென்றால், அது பல நோய்களை ஏற்படுத்தக் கூடியதாக தான் இருக்கும்.
தற்போது இந்த பதில் கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
புற்றுநோய்
புற்று நோய் என்பது ஒரு சாதாரணமான நோயாக போய்விட்டது. புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதற்கு மருந்துகள் கண்டுபிடித்தாலும், இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
கடுகு எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்கள் உள்ளது. நமது உணவுகளில் கடுகு எண்ணெயை பயன்படுத்தி வந்தால், வயிற்று சம்பந்தமான பல நோய்கள் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படுகிறது. மேலும், புற்றுநோய் உருவாக்கும் கிருமிகளையும் அளிக்கிறது.
தலைமுடி
இன்று அதிகமானோருக்கு தலைமுடி பிரச்னை எனபது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. தலைமுடி பிரச்னை உள்ளவர்கள் செயற்கையான மருத்துவ முறைகளை நாடாமல், இயற்கையான மருத்துவ முறைகளை கையாள்வது மிக சிறந்தது.
அந்த வகையில், கடுகு எண்ணெய் மிகச் சிறந்த இயற்கையான மருத்துவ முறை. கடுகு எண்ணையை தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் நன்கு ஊறிய பின்பு குளிக்க வேண்டும். மூன்று வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வந்தால் நெடு நாட்களாக இருக்கும் ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் முற்றிலும் நீங்கி விடும்.
விஷ முறிவு
விஷப்பூச்சிகளான பாம்பு, பூச்சிகள், வண்டுகள் கடிப்பதால் உடலில் கடுமையான நச்சு பாதிப்பு உண்டாகிவிடுகிறது. இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் போது, கடிபட்ட இடத்தில் கடுகு எண்ணையை தடவி வந்தால், விஷம் முறிந்து விடும்.
செரிமானம்
நம்மில் பலருக்கு சாப்பிட்ட பின்பு, செரிமானம் ஆகுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் கடுகு எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவு பொருட்களை அவ்வப்போது சிறிதளவு சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மையை நீக்குகிறது. மேலும், இது குடல் பிரச்சனைகளை நீக்குகிறது.
சொரியாசிஸ்
சொரியாசிஸ் நோய் உள்ளவர்களுக்கு கடுகு எண்ணெய் மிக சிறந்த தீர்வாக அமைகிறது. சொரியாசிஸ் நோய் தோல்களில் ஏற்படும் வேதியல் மாற்றங்களால் உண்டாக்குகிறது.
இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் இரவு தூங்கும் போது, கடுகு எண்ணெயை பூசி காலையில் எழுந்ததும் குளித்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இதய பிரச்னை
இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதில் கடுகு எண்ணெய் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. கடுகு எண்ணெய்யில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால்கள் அதிகமாக உள்ளது.
மேனோசேச்சுரேட் மற்றும் பாலிசேச்சுரேட் கொழுப்புகள் இதில் காணப்படுகின்றன. இவை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், எந்த நோய்களும் வராமலும் பாதுகாக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.