அடடே…! இந்த பூவில் இவ்வளவு மருத்துவ குணங்களா….?
இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்பதில் சந்தேகமே இல்லை. இயற்கை நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பல வளங்களை கொண்டுள்ளது. அனைத்து மரம், செடி, கொடிகளும் ஏதோ ஒரு விதத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக தான் உள்ளது.
இந்த பதிவில் செங்காந்தள் பூவின் மருத்துவ குணங்களையும், அவை குணப்படுத்தும் நோய்களை பற்றியும் பாப்போம்.
செங்காந்தள் பூ பல மருத்துவ குணங்களை கொண்ட பூ. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. இந்தப் பூவை உற்றுப்பார்த்தால், கண்வலி வரும் என்று சொல்கிறார்கள், அதனால் இதை ‘கண்வலிப்பூ’ என்றும் அழைக்கிறார்கள்.
உதிரா மலர்
செங்காந்தள் மலரில் தேன் அதிகமாக காணப்படுவதால், எப்போதும் வண்டுகளும் தேனீக்களும் இந்த பூவை சுற்றிக்கொண்டே இருக்கும். பொதுவாக, மலர்கள் அனைத்துமே பூத்து உத்திரக்கூடியவை. ஆனால் இந்த மலர் வாடினாலும் உதிராத தன்மை கொண்டது.
விஷக்கடி
செங்காந்தள் பூ பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்கள் இந்த செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்க்காய் அளவு தினமும் காலை, மாலை மூன்று நாள்கள் சாப்பிட்டால் விஷம் இறங்கி விடும்.
வண்டு கடித்தால் இதன் இலையை அரைத்துப் பூசி சீயக்காய் தேய்த்து குளித்தல் விஷம் இறங்கி விடும்.
எலிக்கடி
எலி கடித்தவர்களுக்கு அதன் விஷம் நமது உடலை தாக்க கூடும். எனவே செங்காந்தள் வேரில் செய்யப்பட்ட தைலத்தை வாரம் ஒருநாள் தலையில் தேய்த்து குளித்து வந்தால் கடிபட்டவர்களுக்கு விஷத்தன்மை குறைந்து விடும்.
பிரசவம்
இந்த செங்காந்தள் பூச்செடி கர்ப்பிணி பெண்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி இறங்காமல் அவதிப்படும் பெண்களுக்கு பச்சை செங்காந்தள் வேர்கிழங்கை அரைத்து தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் தடவுவார்கள். இப்படி செய்யும் போது நஞ்சுக்கொடி இறங்கி விடும்.
மூட்டு வலி
இன்று வயதானோர் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று மூட்டுவலி தான். இந்த நோயை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் செங்காந்தள் மலருக்கு உண்டு. செங்காந்தள் வேரில் செய்யப்பட்ட தைலத்தை தொடர்ந்து தடவி வர மூட்டு வலி நீங்கும்.
வெண்குஷ்டம்
இந்த பூ வெண்குஷ்டத்தை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்த பூ வெண்குஷ்டம், வாதநோய் போன்ற நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. இதன் சாற்றை பூசி வந்தால் வெண்குஷ்டம் நீங்கி விடும்.