பிஸ்தா பருப்பில் உள்ள பிரமிக்க வைக்கும் மருத்துவ குணங்கள்…..!!!

Default Image

பிஸ்தா பருப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. பிஸ்தா பருப்பில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது.

Image result for பிஸ்தா பருப்பு

 

தற்போது இந்த பதிவில், பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவக்குணங்களை பற்றி பார்ப்போம்.

இரத்தம்

பிஸ்தா பருப்பு இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்தத்தை சுத்தமாக்குகிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இது ஒரு அவசியமான பொருளாக கருதப்படுகிறது.

Related image

இது செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.

மண்ணீரல்

பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இது செல்களுக்கு ஆக்சிஜனை கொடுக்கிறது.

Image result for மண்ணீரல்

வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நியாபக சக்தி

பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது, நமது நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. வைட்டமின் பி6 ல் ஹீமோகுளோபின் என்ற அமிலம் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்சிஜனை ரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கும் பணியையும் செய்கிறது.

Image result for நியாபக சக்தி

மேலும் தினமும் மாலையில் சூடான பாலில் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் நியாபக சக்தி அதிகரிக்கும்.

தோல் நோய்கள்

Related image

 

இந்த பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது தோல் நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பருப்பில் உள்ள வைட்டமின் ஈ ஆனது புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.

கண்நோய்

Image result for கண்நோய்

இந்த பருப்பை நாம் தொடர்ந்து சாப்பிடும் போது, கண்நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. இது கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கண்ணுக்கு தெளிவான பார்வையை கொடுக்கக் கூடியது.

இதய நோய்

Image result for இதய நோய்

இதய நோய் ஏற்படுவதில் இருந்து இந்த பருப்பு நம்மை பாதுகாக்கிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது. மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது உடலிலுள்ள கேட்ட கொழுப்புகளை கரைத்து, ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்