வாழவைக்கும் வாழைப்பழத்தின் வல்லமையான மருத்துவ குணங்கள்…..!!!
- வாழைப்பழத்தில் உள்ள பயன்களும், அதன் மருத்துவ குணங்களும்.
வாழைப்பழம் நாம் அனைவரும் அறிந்த பலவகைகளில் ஒன்று தான். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளதால், இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட எந்த வித பயமும் இல்லாமல் சாப்பிடலாம்.
உடல் எடை
இன்றைய தலைமுறையினரின் மிக பெரிய பிரச்னை உடல் எடை அதிகரிப்பு. உடல் எடையை குறைக்க நாம் செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுவதை விட, இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
உடல் எடை அதிகம் உள்ளவர்கள், டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்தால், உடல் எடை குறையும்.
சிறுநீரக பிரச்னை
சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். வாழைப்பழத்தில் உள்ள குறைந்த அளவு புரோட்டீன் மற்றும் உப்பு மற்றும் அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட் சிறுநீரகத்தில் ஏற்படும் தீவிர பிரச்சனைகளை போக்கும்.
இதய பிரச்னை
இதய பிரச்னை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள செல்களில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர்மத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோயான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதை தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
அல்சர்
அல்சர் பிரச்னை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும். வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடலில் ஏற்படும் புண்களை ஆற பண்ணுகிறது. மேலும், இது வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குகிறது.
இரத்த சோகை
வாழைப்பழம் இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், இரத்த சோகை நீங்கி, இரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நீரிழிவு
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த பழமாகும். வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து, நீரிழிவு நோயில் இருந்து விடுதலை அளிக்கிறது.
உடல் ஆற்றல்
வாழைப்பழம் நமது உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி, அதிகப்படியான ஆற்றலை அளிக்கக் கூடியது. வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும்.
உடலை ஆரோக்கியமாகவும், உற்சாகத்துடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது.